Janu / 2024 ஓகஸ்ட் 19 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1919 : ஐக்கிய இராச்சியத்தில் இருந்து ஆப்கானிஸ்தான் முழுமையான விடுதலை அடைந்தது.
1927: ரஷ்ய மரபுவழித் திருச்சபையின் தலைவர் செர்ச்சியஸ் சோவியத் ஒன்றியத்துக்குத் தனது ஆதரவைத் தெரிவித்தார்.
1934 : ஜேர்மனியில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் பியூரர் என்ற பெயருடன் ஹிட்லரை அரசுத்தலைவராக 89.9% மக்கள் ஆதரவாக வாக்களித்தனர்.
1942 : இரண்டாம் உலகப் போர் - தியப் தாக்குதல் - கனடாவின் தலைமையில் நேச நாடுகளின் படையினர் பிரான்சின் தியப் துறைமுகம் மீது தாக்குதல் நடத்தித் தோல்வியடைந்தனர். பெரும்பாலான கனடியப் படைகள் கொல்லப்பட்டனர் அல்லது கைது செய்யப்பட்டனர்.
1944: இரண்டாம் உலகப் போர் - பாரிசின் விடுவிப்பு - ஜேர்மனியின் ஆக்கிரமிப்புக்கு எதிராக நட்பு நாடுகளின் உதவியுடன் பாரிசு தாக்குதலைத் தொடுத்தது.
1945 : ஓகஸ்ட் புரட்சி - ஹோ சி மின் தலைமையில் வியட் மின் படையினர் வியட்நாமின் அனோய் நகரைக் கைப்பற்றினர்.
1953 : பனிப்போர் - அஜாக்ஸ் நடவடிக்கை - ஈரானில் அமெரிக்காவின் உளவுத்துறையின் உதவியுடன் முகம்மது மொசாதெகின் அரசு கவிழ்க்கப்பட்டு, முகம்மத் ரிசா ஷா பஹ்லவி பதவியில் அமர்த்தப்பட்டார்.
1955 : ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கே, பெரும் வெள்ளத்துடன் கூடிய சூறாவளி தாக்கியதில் 200 க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
1960 : பனிப்போர் - மாஸ்கோவில் கைப்பற்றப்பட்ட அமெரிக்க யூ-2 போர்விமானத்தின் விமானி பிரான்சிஸ் பவர்ஸ் என்பவருக்கு சோவியத் ஒன்றியம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது.
1960 : இஸ்ப்புட்னிக் திட்டம் - சோவியத்தின் இஸ்ப்புட்னிக் 5 விண்கலம் பெல்கா, ஸ்திரெல்கா என்ற இரு நாய்களையும், 40 சுண்டெலிகளையும், 2 எலிகளையும், பல வகைத் தாவரங்களையும் விண்ணுக்குக் கொண்டு சென்றது.
1964 : சின்கொம் 3 என்ற முதலாவது புவிநிலை தகவல் செயற்கைக்கோள் ஏவப்பட்டது.
1978 : ஈரானில் திரையரங்கு ஒன்று தீப்பிடித்ததில், 400 க்கும் அதிகமானோர் உயிரிழந்தன்ர்.
1980 : சவூதி அரேபியா, ரியாத் நகரில் சவூதியா 163 என்ற விமானம் தரையில் மோதித் தீப்பிடித்ததில் 301 பேர் உயிரிழந்தனர்.
1981 : அமெரிக்கப் போர் விமானங்கள் சித்ரா வளைகுடாவில் இரண்டு லிபிய வான்படை விமானங்களைத் தாக்கி அழித்தனர்.
1987 : ஐக்கிய இராச்சியம், ஹங்கர்ஃபோர்ட் என்ற இடத்தில் மைக்கேல் ராயன் என்பவன் 16 பேரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று தன்னையும் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டான்.
1989 : பனிப்போர் - போலந்தின் பிரதமராக சொலிடாரிட்டி தொழிற்சங்கத் தலைவர் டாடியூஸ் மசவியேக்கி அரசுத்தலைவர் யாருசெல்ஸ்கியினால் தெரிவுசெய்யப்பட்டார். 42 ஆண்டுகளின் பின்னர் தெரிவு செய்யப்படும் முதல் கம்யூனிஸ்ட் அல்லாத பிரதமர் இவரே ஆவார்.
1991 : ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி ஒன்றில் சோவியத் தலைவர் மிக்கைல் கொர்பச்சோவ் கிரிமியாவில் ஓய்வெடுக்கும் போது கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
1999 : பெல்கிறேட் நகரில், பல்லாயிரக்கணக்கான செர்பியர்கள் யுகோஸ்லாவிய அரசுத்தலைவர் சிலோபதான் மிலொசேவிச்சைப் பதவி விலகக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2002 : ரஷ்ய மில் எம்.ஐ-26 உலங்குவானூர்தி மீது செச்சினியத் தீவிரவாதிகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில் 118 ரஷ்யப் படையினர் கொல்லப்பட்டனர்.
2003 : இஸ்ரேல், எருசலேம் நகரில் பஸ் ஒன்றின் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டதில், பல சிறுவரக்ள் உட்பட 23 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.
200: ஈராக்கின் ஐநா தூதரகம் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதில் உயர் அதிகாரி, 21 பணியாளர்கள் கொல்லப்பட்டனர்.
2009 : ஈராக், பகுதாது நகரில் தொடர் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதில், 101 பேர் கொல்லப்பட்டனர். 565 பேர் காயமடைந்தனர்.
2010 : ஈராக்கிய விடுதலை நடவடிக்கை முடிவுக்கு வந்தது. கடைசி அமெரிக்க தாக்குதல் படைகள் எல்லை தாண்டி குவைத் சென்றனர்.
2013 : இந்தியாவின் பீகார் மாநிலத்தில் ரயில் ஒன்று விபத்துக்குள்ளானதில் 37 பேர் உயிரிழந்தனர்.

35 minute ago
51 minute ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
51 minute ago
3 hours ago
5 hours ago