Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Editorial / 2018 மே 07 , மு.ப. 12:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
1915: முதலாம் உலகப் போர் - ஜேர்மனியின் யூ-20 நீர்மூழ்கிக் கப்பல், பிரித்தானியாவின் லூசித்தானியா என்ற ஆடம்பரக் கப்பலைத் தாக்கி மூழ்கடித்ததில், 1,198 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 128 பேர் அமெரிக்கர் ஆவர்.
1920: போலந்துப் படைகள், உக்ரேனின் கீவ் நகரைத் தாக்கிக் கைப்பற்றின. இவர்கள், ஒரு மாதத்தின் பின்னர், கம்யூனிச செஞ்சேனைப் படைகளால் வெளியேற்றப்பட்டனர்.
1920: சோவியத் ரஷ்யா, ஜோர்ஜியாவின் விடுதலையை அங்கிகரித்தது. ஆனாலும், ஆறு மாதத்தின் பின்னர் அது ஜோர்ஜியாவைக் கைப்பற்றியது.
1927: நிக்கராகுவாவின் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
1930: 7.1 ரிச்டர் அளவு நிலநடுக்கம், வடமேற்கு ஈரான், தென்கிழக்குத் துருக்கியைத் தாக்கியதில், சுமார் 3,000 பேர் உயிரிழந்தனர்.
1942: இரண்டாம் உலகப் போர் - பவளக் கடல் சமரின் போது, அமெரிக்கக் கடற்படையின் வானூர்தித் தாங்கிக் கப்பலொன்று, சோகோகோ என்ற ஜப்பானியக் கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது.
1945: இரண்டாம் உலகப் போர் - நாட்சி ஜெர்மனியின் இராணுவத் தளபதி அல்பிரட் யோடில், ஜெர்மனியின் நிபந்தனையற்ற சரணடைதலுக்கு, பிரான்சில் கையெழுத்திட்டார். அடுத்த நாள் இது அமுலுக்கு வந்தது.
1946: சோனி நிறுவனம், 20 தொழிலாளர்களுடன் டோக்கியோவில் ஆரம்பிக்கப்பட்டது.
1948: ஐரோப்பியப் பேரவை உருவாக்கப்பட்டது.
1952: நவீன கணினிகளுக்கான ஒருங்கிணைந்த மின்சுற்றுத் தத்துவம், ஜெப்ரி டம்மர் என்பவரால் வெளியிடப்பட்டது.
1954: வியட்நாமில் இடம்பெற்ற "தியன் பியன் பு" சமரின் போது, பிரெஞ்சுப் படைகள் தோற்கடிக்கப்பட்டன.
1992: நாசாவின் எண்டெவர் விண்ணோட்டம், தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்தது.
1999: திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர், ருமேனியாவுக்குச் சென்றார். திருத்தந்தை ஒருவர், கிழக்கு மரபுவழித் திருச்சபை நாடொன்றுக்குச் செல்வது, 1054இல் பெரும் சமயப்பிளவு இடம்பெற்றதன் பின்னர் இதுவே முதற்றடவையாகும்.
1999: கினி-பிசாவு நாட்டின் அரசுத் தலைவர் ஜொவாவோ பேர்னார்டோ வியெய்ரா, இராணுவப் புரட்சி ஒன்றில் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
2000: விளாடிமிர் புட்டின், ரஷ்யாவின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2002: சீனாவின் விமானம் ஒன்று, மஞ்சள் கடலில் வீழ்ந்ததில், 112 பேர் உயிரிழந்தனர்.
2007: உரோமைப் பேரரசர் முதலாம் ஏரோதின் கல்லறை, ஜெருசலேம் நகருக்கருகில், இஸ்ரேலியத் தொல்லியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
2007: நாடு கடந்த நிலையில் வாழ்ந்த பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, நாடு திரும்பினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
17 minute ago