2021 நவம்பர் 30, செவ்வாய்க்கிழமை

வரலாற்றில் இன்று : செப்டெம்பர் 25

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 25 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1493:  அமெரிக்காவை நோக்கி தனது இரண்டாவது பயணத்தை (17 கப்பல்களுடன்) கொலம்பஸ் ஆரம்பித்தார்.

1639: அமெரிக்காவில் முதல் அச்சகம் திறப்பு.

1789 – அமெரிக்க காங்கிரஸ் ,அரசியலமைப்பிற்கு மனித உரிமைகளுக்கான 10 திருத்தங்கள் உட்பட 12 திருத்தங்களைக் கொண்டு வந்தது.

1911: துருக்கிக்கு எதிராக இத்தாலி யுத்தப் பிரகடணம்.

1950: மூன்று மாதகாலம் வடகொரியாவின் பிடியிலிருந்த தென்கொரிய தலைநகர் சியோலை ஐ.நா. படைகள் கைப்பற்றின.

1959: இலங்கைப் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க  தல்துவே சோமாராம தேரரினால் சுடப்பட்டார். மறுநாள் பண்டாரநாயக்க மரணமடைந்தார்.

1959: அத்திலாந்திக் சமுத்திரத்திற்கிடையில் (கனடா -ஸ்கொட்லாந்து) கடலடி தொலைபேசி கம்பிகள் செயற்படத் தொடங்கின.

1962 – அல்ஜீரிய மக்கள் சனநாயகக் குடியரசு அமைக்கப்பட்டது.

1978 – கலிபோர்னியாவில் சான் டியாகோ நகரில் இரண்டு விமானங்கள் மோதியதில் 144 பயணிகள் கொல்லப்பட்டனர்.

1983 – வட அயர்லாந்தில் 38 ஐரியக் குடியரசு இராணுவக் கைதிகள் சிறையை உடைத்து தப்பினர்.

1992 – யாழ்ப்பாணம்,பூநகரியில் 62 இராணுவக் காவலரண்கள் விடுதலைப் புலிகளினால் தாக்கி அழிக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .