2022 மே 18, புதன்கிழமை

வரலாற்றில் இன்று: டிசெம்பர் 31

Ilango Bharathy   / 2021 டிசெம்பர் 31 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

1847 : ஆறுமுக நாவலர் தனது முதலாவது பிரசங்கத்தை வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோவிலில் ஆரம்பித்தார்.

1923 : இலண்டனின் பிக் பென் மணிக்கூண்டின் மணியொலி, மணிக்கொரு தடவை பிபிசியில் ஒலிபரப்பு செய்ய ஆரம்பிக்கப்பட்டது.

1944 : இரண்டாம் உலகப் போர் - ஹங்கேரி நாட்சி ஜேர்மனி மீது போரை அறிவித்தது.

1944 : இரண்டாம் உலகப் போர் - மேற்குப் போர்முனையின் கடைசிப் போர் நார்ட்வின்ட் நடவடிக்கை ஆரம்பமானது.

1946 : அமெரிக்க அதிபர் ஹரி ட்ரூமன் இரண்டாம் உலகப் போரில் ஐக்கிய அமெரிக்காவின் பங்கு முடிவுக்கு வந்ததாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

1963 : மத்திய ஆப்பிரிக்கக் கூட்டமைப்பு அதிகாரபூர்வமாகக் கலைந்தது. சாம்பியா, மலாவி, ரொடீசியா என மூன்று நாடுகள் உருவாகின.

1968 : உலகின் முதலாவது சூப்பர்சோனிக் பயணிகள் விமானம், துப்போலெவ் டி.யு-144 தனது முதலாவது பறப்பை மேற்கொண்டது.

1981 : கானாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அதிபர் இல்லா லிமான் பதவியிலிருந்து அகற்றப்பட்டார்.

1983 : நைஜீரியாவில் இராணுவத் தளபதி மேஜர் முகம்மது புகாரி தலைமையில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து, இரண்டாவது நைஜீரியக் குடியரசு கலைந்தது.

1984 : ராஜீவ் காந்தி இந்தியப் பிரதமரானார்.

1986 : புவேர்ட்டோ ரிக்கோவில் சான் வான் நகரில் உணவுசாலையை அதன் மூன்று ஊழியர்கள் தீ வைத்ததில், 97 பேர் கொல்லப்பட்டு 140 பேர் காயமடைந்தனர்.

1987 : ரொபேர்ட் முகாபே சிம்பாப்வேயின் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1992 : செக்கோஸ்லோவாக்கியா கலைக்கப்பட்டு செக் குடியரசு, சிலோவாக்கியா என இரு நாடுகளாகப் பிரிந்தது.

1994 : பீனிக்சு தீவுகள், மற்றும் லைன் தீவுகளில் நேரமாற்றம் நடைமுறைப்படுத்தப்பட்டதை அடுத்து, கிரிபட்டியில் இந்நாள் முற்றாக விலக்கப்பட்டது.

1999 : ரஷ்யாவின் முதலாவது அரசுத்தலைவர் போரிஸ் யெல்ட்சின் பதவி விலகினார். பிரதமர் விளாதிமிர் பூட்டின் அரசுத்தலைவரானார்.

1999 : 1977 ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு அமைய, ஐக்கிய அமெரிக்கா பனாமா கால்வாயின் அதிகாரத்தை பனாமாவிடம் ஒப்படைத்தது.

1999 : இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 814 ஐ கடத்திய ஐந்து கடத்தல்காரர்கள், தாம் விடுவிக்கக் கோரிய இரண்டு இஸ்லாமிய மதகுருமார்கள் விடுவிக்கப்பட்டதை அடுத்து, 190 பணயக்கைதிகளையும் விடுவித்துவிட்டு, விமானத்தைக் கைவிட்டு வெளியேறினர்.

2004 : உலகின் அப்போதைய மிக உயரமான வானளாவியான தாய்வானின் 509 மீற்றர் உயர தாய்ப்பே 101 அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.

2006 : ஐக்கிய அமெரிக்காவிடம் இரண்டாம் உலகப் போரின் போது பெற்ற கடன்களை ஐக்கிய இராச்சியம் முழுவதுமாக கட்டி முடித்தது.

2009 : நீல நிலவும் நிலவு மறைப்பும் நிகழ்ந்தன.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .