2023 செப்டெம்பர் 28, வியாழக்கிழமை

வரலாற்றில் இன்று: டிசம்பர் 07

Ilango Bharathy   / 2022 டிசெம்பர் 07 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1813 – பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: பிரித்தானியப் படையினர் நியூயோர்க்கின் பஃபலோ நகரை தீயிட்டு அழித்தனர்.

1853 – ஐக்கிய அமெரிக்கா தொடருந்து போக்குவரத்துப் பாதை அமைப்பதற்காக, மெக்சிக்கோவிடமிருந்து 76,770 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட காட்சென் என்ற இடத்தை 10 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு வாங்கியது.

1896 – பிலிப்பீன்சின் தேசியவாதி ஒசே ரிசால், மணிலாவில் எசுப்பானிய ஆதிக்கவாதிகளால் மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நாள் பிலிப்பீன்சில் ரிசால் நாள் என்ற பெயரில் விடுமுறை நாளாகும்.

1897 – பிரித்தானியக் குடியேற்ற நாடான நட்டால் சூலிலாந்தை இணைத்துக் கொண்டது.

1903 – சிக்காகோவில் நாடக அரங்கு ஒன்றின் இடம்பெற்ற தீயினால் குறைந்தது 605 பேர் இறந்தனர்.

1906 – அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சி டாக்காவில் ஆரம்பிக்கப்பட்டது.

1916 – அங்கேரியின் கடைசி மன்னராக முதலாம் சார்லஸ் முடிசூடினார்.

1922 – சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம் உருவாக்கப்பட்டது.

1924 – யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ் மாநாட்டில் சாதி ஒழிப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

1941 – மகாத்மா காந்தி இந்திய தேசிய காங்கிரஸ் தலைமைப் பதவியிலிருந்து விலகினார்.

1943 – சுபாஷ் சந்திர போஸ் அந்தமான் தீவுகளின் போர்ட் பிளையர் நகரில் இந்திய விடுதலைக் கொடியை ஏற்றினார்.

1947 – பனிப்போர்: உருமேனியாவின் மன்னர் முதலாம் மைக்கேல் சோவியத் ஆதரவு கம்யூனிச அரசால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

1949 – இந்தியா சீனாவை அங்கீகரித்தது.

1965 – பேர்டினண்ட் மார்க்கொஸ் பிலிப்பீன்சின் அரசுத்தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.

1972 – வியட்நாம் போர்: ஐக்கிய அமெரிக்கா வடக்கு வியட்நாம் மீதான குண்டுத் தாக்குதல்களை இடைநிறுத்தியது.

1993 – இஸ்ரேலும் வத்திக்கானும் தூதரக உறவுகளை ஏற்படுத்தின.

1996 – அசாம் மாநிலத்தில் பயணிகள் தொடருந்து ஒன்றில் போடோ போராளிகளால் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில், 26 பேர் கொல்லப்பட்டனர்.

1997 – அல்ஜீரியாவில் நான்கு ஊர்களில் இடம்பெற்ற வன்முறைகளில் மொத்தம் 400 பேர் கொல்லப்பட்டனர்.

2000 – பிலிப்பீன்சின் தலைநகர் மணிலாவில் இடம்பெற்ற பல தொடர் குண்டுவெடிப்புகளில், 22 பேர் கொல்லப்பட்டு நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.

2004 – அர்கெந்தீனாவின் புவனெசு ஐரிசு நகரில் இரவு விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீயினால் 194 பேர் உயிரிழந்தனர்.

2006 – எசுப்பானியாவில் மத்ரித்-பராஹாஸ் விமான நிலையம் மீது எட்டா போராளிகள் குண்டுத்தாக்குதல் நடத்தியதில் இருவர் கொல்லப்பட்டு 50 பேருக்கு மேல் காயமடைந்தனர்.

2006 – முன்னாள் ஈராக் அரசுத்தலைவர் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டார்.

2006 – நடுக்கடலில் ஏற்பட்ட புயலில் 850 பயணிகளுடன் சென்ற செனாபதி நுசந்தாரா என்ற இந்தோனீசியக் கப்பல் கடலில் மூழ்கியது. 400 பேர் வரை உயிரிழந்தனர்.

2006 – முல்லைத்தீவு மாவட்ட கத்தோலிக்க ஆலயத்தால், கடல்கோளால் பாதிக்கப்பட்டவர்களை பராமரிக்கும் ஆண், பெண் விடுதிகள் மீதும் பொதுமக்கள் வீடுகள் மீதும் விமானத் தாக்குதல் நடைபெற்றதில் ஐந்து சிறுவர்கள் படுகாயமடைந்தனர்.

2013 – காங்கோ தலைநகர் கின்சாசாவில் அரசு-எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை அடுத்து 100 பேர் வரை கொல்லப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .