Ilango Bharathy / 2021 ஒக்டோபர் 13 , மு.ப. 07:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
54: ரோமப் பேரரசன் குளோடியசு அவனது நான்காவது மனைவியினால் நஞ்சூட்டிக் கொல்லப்பட்டதை அடுத்து, அவளது மகன் நீரோ ரோமப் பேரரசனானான்.
1492: கொலம்பஸும் அவரது குழுவினரும் பகாமாசில் தரையிறங்கினர்.
1582: கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.
1792: வெள்ளை மாளிகைக்கான அடிக்கல் வாஷிங்டன், டிசியில் இடப்பட்டது.
1884: அனைத்துலக நேரம் கணிக்கும் இடமாக இலண்டனில் உள்ள கிறீனிச் தெரிவு செய்யப்பட்டது.
1885: ஜோர்ஜியா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
1917: யாழ்ப்பாணம் மாநகராட்சிப் பகுதி மத்திய, மேற்கு, கிழக்கு என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன.
1923: துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல் இலிருந்து அங்காராவுக்கு மாற்றப்பட்டது.
1943: இரண்டாம் உலகப் போர் - புதிய இத்தாலிய அரசு ஜெர்மனி மீது போரை அறிவித்தது.
1944: இரண்டாம் உலகப் போர் - லாத்வியாவின் தலைநகர் ரீகா சோவியத்தின் செஞ்சேனையினால் கைப்பற்றப்பட்டது.
1953: இலங்கைப் பிரதமர் பதவியை டட்லி சேனநாயக்கா துறந்தார்.
1970: பிஜி ஐக்கிய நாடுகள் அவையில் இணைந்தது.
1972: மொஸ்கோவுக்கு வெளியே ஏரோபுளொட் விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில் 174 பேர் கொல்லப்பட்டனர்.
1972: உருகுவாய் விமானம் ஒன்று ஆர்ஜெண்டீனாவுக்கும் சிலிக்கும் இடையில் அந்தீசு மலைகளில் மோதியது. டிசம்பர் 23 ஆம் நாள் 45 பேர்களில் 16 பேர் மட்டும் மீட்கப்பட்டனர்.
1976: பொலீவியாவைச் சேர்ந்த போயிங் சரக்கு விமானம் ஒன்று சாண்டா குரூஸ் நகரில் வீழ்ந்ததில் தரையில் நின்ற 97 பேர் (பெரும்பாலானோர் குழந்தைகள்) உட்பட 100 கொல்லப்பட்டனர்.
1990: சிரியப் படைகள் லெபனான் மீது தாக்குதலை ஆரம்பித்தது.
19 Nov 2025
19 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 Nov 2025
19 Nov 2025