2023 ஜூன் 09, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று; மார்ச் 15

Ilango Bharathy   / 2023 மார்ச் 15 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிமு 44: உரோமின் சர்வாதிகாரி யூலியசு சீசர் மார்க்கஸ் புரூட்டஸ் மற்றும் உரோமை, செனட்டர்கள் குத்திப் படுகொலை செய்தனர்.

933: பத்தாண்டுகள் அமைதிக்குப் பின்னர், ஜேர்மனிய  மன்னன் முதலாம் என்றி, ஹங்கேரிய இராணுவத்தை, ரியாட் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்கடித்தான்.

1493: கொலம்பஸ், அமெரிக்காக்களுக்கான தனது முதலாவது பயணத்தை முடித்துக்கொண்டு எசுப்பானியா திரும்பினார்.

1564: முகலாயப் பேரசர் அக்பர், "ஜிஸ்யா" எனப்படும் தலைவரியை நீக்கினார்.

1776: தெற்கு கரோலினா, பிரித்தானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்ற முதலாவது அமெரிக்கக் குடியேற்ற நாடு இதுவாகும்.

1802: இலங்கையின் முதலாவது அரச வர்த்தமானி வெளியிடப்பட்டது.

1819: பிரான்ஸிய இயற்பியலாளர் பிரெனெல், ஒளி ஒரு அலை போல் செயல்படுகிறது என நிறுவினார்.

1820: ஐக்கிய அமெரிக்காவின் 23ஆவது மாநிலமாக, மேய்ன் இணைந்தது.

1848: ஹங்கேரியில் புரட்சி வெடித்தது. ஆப்சுபேர்க் ஆட்சியாளர்கள், சீர்திருத்தக் கட்சியின் முக்கிய நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று.

1877: முதலாவது தேர்வுத் துடுப்பாட்டம், இங்கிலாந்துக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில், மெல்பேர்ன் துடுப்பாட்ட அரங்கில் ஆரம்பமானது.

1888: ஆங்கிலோ-சிக்கிம் போர் ஆரம்பமானது.

1917: ரஷ்யப் பேரரசர் இரண்டாம் நிக்கலஸ், முடி துறந்தார். 304ஆண்டுகால ரொமானொவ் வம்ச ஆட்சி முடிவுக்கு வந்தது.

1921: உதுமானியப் பேரரசின் முன்னாள் பிரதமரும் ஆர்மீனிய இனப்படுகொலையின் சூத்திரதாரியுமான தலாத் பாஷா, பெர்லினில் ஆர்மீனியர் ஒருவரால் படுகொலை செய்யப்பட்டார்.

1922: ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து முறையாக விடுதலை அடைந்த எகிப்தின் முதலாம் புவாட்,  மன்னனானார்.

1931: வைக்கிங்கு என்ற கப்பல்? நியூபவுன்லாந்து அருகே வெடித்ததில் 27 பேர் கொல்லப்பட்டனர்.

1943: இரண்டாம் உலகப் போர் - நாட்சி ஜேர்மனியப் படையினர், உக்ரேனின் கார்க்கொவ் நகரை சோவியத் இராணுவத்திடம் இருந்து கைப்பற்றினர்.

1951: ஈரானில் எண்ணெய் உற்பத்தி, தேசிய மயமாக்கப்பட்டது.

1961: பொதுநலவாய நாடுகளில் இருந்து, தென்னாபிரிக்கா வெளியேறியது.

1970: எக்ஸ்போ '70 உலகக் கண்காட்சி, ஜப்பானின் ஒசாக்கா நகரில் ஆரம்பமானது.

1978: சோமாலியா, எத்தியோப்பியாவுக்கு இடையேயான போர் முடிவுக்கு வந்தது.

1985: முதலாவது இணைய ஆள்களப் பெயர் (symbolics.com) பதியப்பட்டது.

1986: சிங்கப்பூரின் நியூ வேர்ல்ட் என்ற உணவு விடுதி இடிந்து வீழ்ந்ததில் 33 பேர் உயிரிழந்தனர்.

1990: மிக்கைல் கொர்பச்சோவ், சோவியத் ஒன்றியத்தின் முதலாவது நிறைவேற்று அரசத் தலைவராகத் தெரிவானார்.

1991: பனிப்போர் - இரண்டாம் உலகப் போரின் பின்னர், ஜேர்மனியின் ஆதிக்க நாடுகளான ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், ஐக்கிய அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் ஆகியவற்றிடம் இருந்து, ஜேர்மன், முழுமையான விடுதலையைப் பெற்றது.

2004: சூரியக் குடும்பத்தின் அதி வேகமான பொருளான 90377 செட்னா கண்டுபிடிக்கப்பட்டது.

2007: இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில், தண்டவத்தா பகுதி காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், 55 காவல்துறையினர் கொல்லப்பட்டனர்.

2011: சிரிய உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.


 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .