2021 ஒக்டோபர் 22, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று ஓகஸ்ட் 23

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 23 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1541: பிரெஞ்சு கடலோடியான  ஜாக் கார்ட்டியர் கனடாவின் கியூபெக் நகரத்திற்கு அருகில் தரையிறங்கினார்.

1765: பர்மா – சியாமிய யுத்தம் ஆரம்பமாகியது.

1839: ஹொங்கொங்கை பிரிட்டன் கைப்பற்றியது. சீனாவுடனான யுத்தத்திற்கு தயாராகுவதற்கான தளமாக ஹொங்கொங்கை பிரிட்டன் பயன்படுத்தியது.

1914: ஜேர்மனிக்கு எதிராக ஜப்பான் போர் பிரகடனம் செய்தது.

1938: அவுஸ்திரேலியாவுடனான டெஸ்ட் கிரிக்கெட் இன்னிங்ஸ் ஒன்றில் இங்கிலாந்து வீரர் லென் ஹட்டன் 364 ஓட்டங்களைப் பெற்று  புதிய சாதனை படைத்தார்.

1939: ஜேர்மனையும் சோவியத் யூனியனும் மோதல்தவிர்ப்பு உடன்படிக்கை செய்துகொண்டன.

1989: அவுஸ்திரேலியாவில் 1645 விமானிகள் ராஜினாமா.

1990: சோவியத் யூனியனிலிருந்து பிரிவதாக ஆர்மேனியா பிரகடனம் செய்தது.

1990: வளைகுடா யுத்தத்தை தவிர்ப்பதற்காக ஈராக் ஜனாதிபதி சதாம் ஹுஸைன் மேற்குலக 'விருந்தினர்கள்' பலருடன் தொலைக்காட்சியில் தோன்றினார். அவர்கள் பணயக்கைதிகள் என மேற்குநாடுகளால் விமர்சிக்கப்பட்டது.

1990: தாம் ஒன்றிணையப்போவதா கிழக்கு ஜேர்மனியும்மேற்கு ஜேர்மனியும் அறிவித்தன.

1996: அமெரிக்கர்களுக்கு எதிராக ஒசாமா பின்லேடன் போர்ப் பிரகடனம்.

2000: பஹ்ரெய்னில் இடம்பெற்ற விமான விபத்தில் 143 பேர் பலி.

2011: லிபியாவில் தேசிய இடைக்கால கவுன்ஸிலின் படைகள் பொப் அல் அஸீஸா நகரை கைபற்றியதன் பின்னர் கேணல் கடாபியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X