2023 ஜூன் 09, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று: ஜனவரி 03

Ilango Bharathy   / 2023 ஜனவரி 03 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1521 – திருத்தந்தை பத்தாம் லியோ ஆணை ஓலை மூலம் மார்ட்டின் லூதரை மதவிலக்கம் செய்தார்.

1653 – இந்தியாவில் கிழக்கத்தியத் திருச்சபை குடியேற்றவாத போர்த்துக்கீசரிடம் இருந்து விலகியது.

1777 – பிரின்ஸ்டன் சமரில் அமெரிக்கத் தளபதி சியார்ச் வாசிங்டன் பிரித்தானியத் தளபதி கார்ன்வாலிசு பிரபுவைத் தோற்கடித்தார்.

1815 – ஆஸ்திரியா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகியன இணைந்து புரூசியா, மற்றும் உருசியாவை எதிர்த்து இரகசிய கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்தின.

1833 – போக்லாந்து தீவுகள் மீது பிரித்தானியா உரிமை கோரியது.

1848 – லைபீரியாவின் முதல் அரசுத்தலைவராக யோசப் யென்கின்சு ராபர்ட்சு பதவியேற்றார்.

1859 – தமிழகத்தில் போளூர் பகுதியில் நிலநடுக்கம் பதியப்பட்டது.

1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஐக்கிய அமெரிக்காவில் இருந்து பிரிவதில்லை என டெலவெயர் வாக்களித்தது.

1870 – புரூக்ளின் பாலம் கட்டுமானப் பணிகள் ஆரம்பமாயின.

1911 – உருசிய துர்க்கெசுத்தானின் அல்மாத்தி நகரை 7.7 அளவு நிலநடுக்கம் தாக்கி அழித்தது.

1919 – பாரிசு அமைதி மாநாட்டில், ஈராக் அமீர் முதலாம் பைசல், சியோனிசத் தலைவர் சைம் வெயிசுமன் உடன் பலத்தீனத்தில் யூதப் பகுதியை அமைக்க உடன்பட்டார்.

1921 – துருக்கி ஆர்மேனியாவுடன் அமைதி உடன்பாட்டிற்கு ஒப்புக்கொண்டது.

1924 – பண்டைய எகிப்தின் துட்டன்காமன் மன்னன் அடக்கம் செய்யப்பட்ட பெட்டியை பிரித்தானியாவின் தொல்லியலாளர் ஹவார்ட் கார்ட்டர் கண்டுபிடித்தார்.

1925 – இத்தாலியின் ஆட்சி அதிகாரம் முழுவதும் தன்னிடம் உள்ளதாக பெனிட்டோ முசோலினி அறிவித்தார்.

1932 – ஒந்துராசில் இராணுவச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

1932 – பிரித்தானிய ஆட்சியாளர் மகாத்மா காந்தி மற்றும் வல்லபாய் பட்டேல் ஆகியோரைக் கைதுசெய்தனர்.

1947 – அமெரிக்கக் காங்கிரசின் அமர்வுகள் முதற்தடவையாக தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டது.

1956 – ஈபில் கோபுரத்தில் ஏற்பட்ட தீயினால் கோபுரத்தின் மேற்பகுதி சேதமடைந்தது.

1957 – முதலாவது மின்கடிகாரத்தை ஹமில்ட்டன் வாட்ச் கம்பனி அறிமுகப்படுத்தியது.

1958 – மேற்கிந்தியத் தீவுகளின் கூட்டமைப்பு அமைக்கப்பட்டது.

1959 – அலாஸ்கா ஐக்கிய அமெரிக்காவின் 49வது மாநிலமானது.

1961 – இடாகோவில் அணுக்கரு உலை ஒன்றில் ஏற்பட்ட கசிவின் காரணமாக மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

1962 – இருபத்திமூன்றாம் யோவான் (திருத்தந்தை) பிடல் காஸ்ட்ரோவை மதவிலக்கு செய்து அறிவித்தார்.

1966 – இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்கும் பாகிஸ்தான் அதிபர் அயூப்கானுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் தாசுகெண்டில் ஆரம்பமாயின.

1974 – யாழ்ப்பாணத்தில் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு ஆரம்பமானது.

1976 – அனைத்துலக பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் உடன்படிக்கை நடைமுறைக்கு வந்தது.

1977 – ஆப்பிள் கணினி நிறுவனமயப்படுத்தப்பட்டது.

1990 – பனாமாவின் முன்னாள் அரசுத்தலைவர் மனுவேல் நொரியேகா அமெரிக்கப் படைகளிடம் சரணடைந்தார்.

1994 – முன்னாள் இனவொதுக்கல் தாயகங்களில் இருந்து ஏழு மில்லியனுக்கும் அதிகமானோர் தென்னாப்பிரிக்காவின் குடியுரிமையைப் பெற்றனர்.

1994 – உருசியாவின் இர்கூத்ஸ்க்கில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று தரையில் மோதி வெடித்ததில் 125 பேர் உயிரிழந்தனர்.

1995 – விடுதலைப் புலிகள் - இலங்கை அரசு பேச்சுக்களின் இரண்டாம் கட்டம் ஆரம்பமானது.

2002 – இஸ்ரேல்-பாலத்தீனப் பிணக்கு: இசுரேலியப் படைகள் செங்கடலில் 50 தொன் எடையுள்ள ஆயுதங்களுடன் பாலத்தீன சரக்குக் கப்பல் ஒன்றைக் கைப்பற்றின.

2004 – எகிப்திய விமானம் ஒன்று செங்கடலில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 148 பேரும் உயிரிழந்தனர்.

2015 – போகோ அராம் போராளிகள் வட-கிழக்கு நைஜீரியாவில் பாகா நகரைக் கைப்பற்றி இரண்டாயிரத்துக்கும் அதிகமானோரைக் கொன்று குவித்தனர்.

2016 – சியா மதகுரு நிம்மர்-அல்-நிம்மர் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஈரான் சவூதி அரேபியாவுடனான தூதரக உறவைத் துண்டித்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .