2021 செப்டெம்பர் 23, வியாழக்கிழமை

வரலாற்றில் இன்று: ஜூன் 30

Ilango Bharathy   / 2021 ஜூன் 29 , மு.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

1882: அமெரிக்க ஜனாதிபதி ஜேம்ஸ் கார்பீல்ட்டை கொலை செய்த குற்றச்சாட்டில் சார்ள்ஸ் ஜே. கெய்டியூ வாஷிங்டன் டி.சி.யில் தூக்கிலிடப்பட்டார்.

1960: பெல்ஜியத்திடமிருந்து கொங்கோ சுதந்திரம் பெற்றது.

1969: பிரிவிணை கோரிய பயாபரா பிராந்தியத்திற்கு செஞ்சிலுவைச் சங்க உணவுப்பொருட்கள் கொண்டு செல்லப்படுவதற்கு நைஜீரியா அனுமதியளிக்க மறுத்தது.

1971: சோவியத் யூனியனின் சோயுஸ் விண்கலத்தின் மூலம் விண்வெளியிலிருந்து திரும்பி வந்த வீரர் ஒருவர் விண்கலத்திலிருந்து ஒட்சிசன் வாயு வெளியேறியதால் உயரிழந்தார்.

1985: லெபனானில் தீவிரவாதிகளால் கைது செய்யப்பட்டு 3 வாரங்களாக பணயக்கைதிகளாக  வைக்கப்பட்டிருந்த 39 அமெரிக்கர்கள் விடுவிக்கப்பட்டனர்.

1990: கிழக்கு ஜேர்மனியும் மேற்கு ஜேர்மனியும் தமது பொருளாதாரங்களை ஒன்றிணைத்தன.

2009: இந்து சமுத்திரத்தில் யேமன் விமானமொன்று விழுந்ததால்  விமானத்திலிருந்த 153 பேரும் உயிரிழந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .