2021 ஓகஸ்ட் 02, திங்கட்கிழமை

வரலாற்றில் இன்று: மே 30

Editorial   / 2021 மே 30 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1431: பிரெஞ்சு வீரப் பெண்ணான ஜோன் ஒவ் ஆர்க்கிற்கு ஆங்லேயே ஆதிக்க விசாரணைக்குழுவினால் மரண தண்டனை விதிக்கப்பட்டு, தீயிலிடப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

1539: தங்கம் கண்டுபிடிக்கும் நோக்கில் ஹெர்னாண்டோ டி சோட்டோ 600 படையினருடன் புளோரிடாவை அடைந்தான்.

1588: 30,000 பேர்களுடன் ஸ்பானிய ஆர்மாடா என்ற 130 ஸ்பானியப் போர்க் கப்பல்களின் கடைசிக் கப்பல், ஆங்கிலக் கால்வாயை நோக்கிய பயணத்தை லிஸ்பனில் இருந்து புறப்பட்டது.

1635:முப்பதாண்டுப் போர் - பிராக் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.

1815: இலங்கையிலிருந்து காயப்பட்ட போர் வீரர்களை ஏற்றி வந்த பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியின் ஆர்னிஸ்டன் என்ற கப்பல், தென்னாபிரிக்காவுக்கு அருகில் மூழ்கியதில் அதில் பயணம் செய்த 378 பேரில் 372பேர் உயிரிழந்தனர்.

1845: திரினிடாட் டொபாகோவுக்கு முதல் தொகுதி இந்தியர்கள் வந்திறங்கினர்.

1883: நியூயோர்க் நகரில் புரூக்ளின் பாலம் இடிந்து விழப்போவதாக எழுந்த வதந்தியை அடுத்து இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர்.

1913: முதலாம் பால்க்கன் போர் - லண்டன் உடன்பாடு, 1913 எட்டப்பட்டு போர் முடிவுக்கு வந்தது. அல்பேனியா தனி நாடாகியது.

1942: இரண்டாம் உலகப் போர் - 1000 பிரித்தானிய போர் விமானங்கள், ஜெர்மனியின் கொலோன் நகரில் 90 நிமிடங்கள் குண்டுமாரி பொழிந்தன.

1966: முன்னாள் கொங்கோ பிரதமர் எவரீஸ்டே கிம்பா மற்றும் பல அரசியல் தலைவர்கள் பகிரங்கமாகத் தூக்கிலிடப்பட்டார்கள்.

1967: நைஜீரியாவின் 'பயாப்ரா' பிராந்தியம்  சுதந்திரப் பிரகடனம் செய்ததையடுத்து சிவில் யுத்தம் மூண்டது.

1967: இஸ்ரேலுக்கு எதிராக எகிப்தும் ஜோர்தானும் பாதுகாப்பு உடன்படிக்கை செய்து கொண்டன.

1972: இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் ஜப்பானிய செம்படையின் இஸ்ரேலிய பிரிவினால்  24 பேர் கொல்லப்பட்டனர்.

1981: பங்களாதேஷ் ஜனாதிபதி ஸியாவுர் ரஹ்மான் இராணுவத்தின் கிளர்ச்சிக் குழுவொன்றினால் கொல்லப்பட்டார்.

1987: இந்தியாவின் கோவா தனி மாநிலமாகியது.

1996: ஆப்கானிஸ்தானில் பூகம்பத்தினால் 5000 பேர் பலி.

1998: வடக்கு ஆப்கானிஸ்தானில் 6.6 றிச்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 5,000 பேர் வரை கொல்லப்பட்டனர்.

2003: எயார் பிரான்சின் கொன்கோர்ட் விமானம் தனது கடைசிப் பயணத்தை ஆரம்பித்தது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .