2025 மே 19, திங்கட்கிழமை

வரலாற்றில் இன்று: டிசெம்பர் 9

Kogilavani   / 2015 டிசெம்பர் 09 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

1905 - பிரான்சில் அரசையும் கிறிஸ்தவ தேவாலயங்களையும் பிரிக்கும் சட்டமூலம் கொண்டுவரப்பட்டது

1917 -  பாலஸ்தீனத்தின்  ஜெருசலேம் நகரை  பிரித்தானியர் கைப்பற்றினர்.

1922 - போலந்தின் முதலாவது அதிபராக 'கப்ரியேல் நருட்டோவிச்' தெரிவு செய்யப்பட்டார்.

1937 - ஜப்பானியப் படைகள் சீன நகரான நாஞ்சிங்கைத் தாக்கின.

1961 - பிரித்தானியாவிடம் இருந்து தங்கனீக்கா விடுதலை பெற்றது.

1979 - பெரியம்மை நோய் முற்றாக அழிக்கப்பட்டு விட்டதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. மனித உயிர் கொல்லி நோயொன்று முற்றாக அழிக்கப்பட்டது இதுவே முதலாவதாகும்.

1992 - வேல்ஸ், இளவரசர் சார்ல்ஸ், இளவரசி டயானா இருவரினதும் பிரிவினை அறிவித்தது.

1995 - உலகின் முதலாவது 24 மணி முழு நேர தமிழ் வானொலி ஒலிபரப்பு, 'கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்' என்னும் பெயரில் கனடாவின் டொராண்டோ நகரில் பரீட்சார்த்தமாக ஆரம்பிக்கப்பட்டது.

2003 - மாஸ்கோ நகர மத்தியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டனர்.

2006 - மாஸ்கோவின் வைத்தியசாலை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் சிக்கி 45 பேர் உயிரிழந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X