2025 மே 19, திங்கட்கிழமை

வரலாற்றில் இன்று: டிசெம்பர் 15

Kogilavani   / 2015 டிசெம்பர் 15 , மு.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

1891 - ஜேம்ஸ் நெய்ஸ்மித் கூடைப்பந்தாட்டத்தை முதன் முதலாக அறிமுகப்படுத்தினார்.

1914 - ஜப்பானில் மிட்சுபிஷி நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 687 பேர் கொல்லப்பட்டனர்.

1941 - உக்ரேனின் ஆர்க்கிவ் நகரில் 15,000 யூதர்கள் நாசிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1960 - மன்னர் மகேந்திரா நேபாளத்தின் அரசைக் கலைத்து நாட்டின் முழு அதிகாரத்தையும் தனதாக்கிக் கொண்டார்.

1970 - சோவியத் ஒன்றியத்தின் வெனேரா 7 விண்கலம் வெள்ளி கோளின் மேற்பரப்பில் மெதுவாக இறங்கிய முதலாவது கலமாகும். இதுவே வேறொரு கோளின் மீது இறங்கிய முதலாவது விண்கலமாகும்.

1970 - தென் கொரியப் பயணிகள் கப்பல் கொரிய நீரிணையில் மூழ்கியதில் 308 பேர் கொல்லப்பட்டனர்.

1994 - இணைய உலாவி நெட்ஸ்கேப் நவிகேட்டர் 1.0 வெளியிடப்பட்டது.

1995 - ஈழத் தமிழருக்கு ஆதரவு தெரிவித்து திருச்சியில் 'அப்துல் ரவூஃப்' என்பவர் தீக்குளித்து இறந்தார்.

1997 - தென் கிழக்கு ஆசியாவை அணுவாயுதமற்ற பகுதியாக அறிவிக்கும் உடன்படிக்கை பாங்கொக்கில் கையெழுத்திடப்பட்டது.

2001 - பீசாவின் சாயும் கோபுரம் 11 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X