Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2016 பெப்ரவரி 20 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
1848: கார்ல் மார்க்ஸ், பிரெட்ரிக்ஸ் ஏங்கல்ஸ் ஆகியோர் 'கம்யூனிஸ விஞ்ஞாபனம்' எனும் நூலை வெளியிட்டனர்.
1878: உலகின் முதல் தெலைபேசி விபரக்கொத்து அமெரிக்காவின் கனெக்டிகட் மாநிலத்தில் வெளியிடப்பட்டது. 50 சந்தாதாரர்களின் விபரங்கள் அதில் அடங்கியிருந்தன.
1947: உடனடியாக புகைப் படங்களை வழங்கும் முதல் கமெராவை (இன்ஸ்டன்ட் கமெரா) நியூயோர்க்கில் எட்வின் லான்ட் என்பவர் செயற்படுத்திக்காட்டினார்.
1952: பிரிட்டனில் வின்ஸ்டன் சர்ச்சில் தலைமையிலான அரசாங்கம் அடையாள அட்டை சட்டத்தை நீக்கியது.
1952: கிழக்கு பாகிஸ்தானில் (தற்போதைய பங்களாதேஷ்) வங்காள மொழியை உத்தியோகபூர்வ மொழியாக அங்கீகரிக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். பின்னர் இத்தினம் சர்வதேச தாய்மொழி தினமாக யுனெஸ்கோவினால் பிரகடனப்படுத்தப்பட்டது.
1953: பிரான்ஸிஸ் கிறிக், ஜேம்ஸ் டி வட்ஸன் ஆகியோர் டி.என்.ஏ. மூலக்கூறு கட்டமைப்பை கண்டுபிடித்தனர்.
1958: ஜெரால்ட் ஹோல்டம் என்பவரால் சமாதான சின்னம் உருவாக்கப்பட்டு, அணுவாயுத ஒழிப்பு பிரச்சாரங்களுக்கு பயன்படுத்தப்பட்டது.
1970: சுவிஸ் எயார் விமானம் சுவிட்ஸர்லாந்தில் விபத்துக்குள்ளானதால் 38 பேர் பலி.
1970: அமெரிக்க ஜனாதிபதி நிக்ஷன் சீனாவுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயமொன்றை மேற்கொண்டார்.
1973: லிபிய பயணிகள் விமானமொன்றை சினாய் பாலைவனத்திற்கு மேலாக இஸ்ரேலிய போர் விமானமொன்று சுட்டுவீழ்த்தியதால் 108 பேர் பலி.
2004: ஐரோப்பாவின் முதலாவது அரசியல் கட்சியான ஐரோப்பிய பச்சை கட்சி ரோம் நகரில் உருவாக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
18 May 2025