Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Menaka Mookandi / 2017 ஜூன் 01 , மு.ப. 12:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
1215: பெய்ஜிங் நகரம் செங்கிஸ் கான் தலைமையிலான மொங்கோலிய படையினால் கைப்பற்றப்பட்டது.
1485: ஹங்கேரியின் மத்தாயஸ் வியென்னாவைக் கைப்பற்றினான்.
1533: இங்கிலாந்தின் அரசியாக ஆன் போலெய்ன் முடிசூடினார்.
1605: மொஸ்கோவில் ரஷ்யப் படைகள் மன்னன் இரண்டாம் ஃபியோதரையும் அவனது தாயாரையும் சிறைப் பிடித்தனர். இவர்கள் பின்னர் தூக்கிலிடப்பட்டனர்.
1792: கென்டக்கி ஐக்கிய அமெரிக்காவின் 15ஆவது மாநிலமாக அறிவிக்கப்பட்டது.
1796: டென்னசி ஐக்கிய அமெரிக்காவின் 16ஆவது மாநிலமாக அறிவிக்கப்பட்டது.
1812: பிரிட்டன் மீது யுத்தப் பிரகடனம்செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜேம்ஸ் மெடிசன் நாடாளுமன்றத்தை கோரினார்.
1831: ஜேம்ஸ் ரொஸ் வட முனையைக் கண்டுபிடித்தார்.
1855: அமெரிக்க நாடுகாண் பயணி வில்லியம் வோக்கர் நிக்கராகுவாவைக் கைப்பற்றினார்.
1869: மின்சாரத்தால் இயங்கும் வாக்களிக்கும் இயந்திரத்துக்கான காப்புரிமத்தை தொமஸ் எடிசன் பெற்றார்.
1879: பிரெஞ்சு இளவரசன் நெப்போலியன் யூஜின் ஆங்கிலோ - சூளு போரில் தென்னாபிரிக்காவில் கொல்லப்பட்டான்.
1910: ரொபேர்ட் ஸ்கொட் தலைமையிலான ஆய்வுக்குழு தென் முனையை நோக்கிய பயணத்தை இங்கிலாந்தில் இருந்து ஆரம்பித்தது.
1941: ஈராக், பக்தாத்தில் யூதர்களுக்கெதிராக இடம்பெற்ற கலவரங்களில் 180 யூதர்கள் கொல்லப்பட்டனர்.
1946: ருமேனியாவின் பிரதமர் இயன் அண்டனேஸ்கு மரணதண்டனக்குள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.
1947: சுதந்திரன் இதழ் கொழும்பில் இருந்து வெளியாக ஆரம்பித்தது.
1959: நிக்கராகுவாவில் புரட்சி ஆரம்பமானது.
1962: நாசி வதைமுகாம்களை உருவாக்கிய அடொல்ஃப் ஐக்குமன் இசுரேலில் தூக்கிலிடப்பட்டார்.
1964: சிறேதொகோ தேசிய வனம் ஜப்பானில் அமைக்கப்பட்டது.
1971: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.
1978: டோக்கியோ பங்குச் சந்தையின் நடவடிக்கைகள் ஆரம்பமாகின.
1979: ஸிம்பாப்வேயில் வெள்ளையின ஆட்சி முடிவுக்கு வந்தது.
1980: சி.என்.என் ஒலிபரப்புச் சேவையை ஆரம்பித்தது.
1981: தெற்காசியாவின் சிறந்த நூலகமாக விளங்கிய யாழ்ப்பாணம் பொது நூலகம், நள்ளிரவில் எரிக்கப்பட்டதில் பல்லாயிரக்கணக்கான பெறுமதிமிக்க நூல்கள் அழிந்தன.
1990: அமெரக்க ஜனாதிபதி ஜோர்ஜ் எச்.டபிள்யூ புஷ், சோவியத் ஜனாதிபதி மிகைல் கொர்பசேவ் ஆகியோர் இரசாயன ஆயுத உற்பத்தியை முடிவுக்கு கொண்டுவரும் உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.
2001: நேபாள மன்னர் பிரேந்திரா, ராணி, ஐஸ்வர்யா மற்றும் பல அரச குடும்பத்தினர் உட்பட 9 பேர் முடிக்குரிய இளவரசர் திபேந்திராவினால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இளவரசர் திபேந்திராவும் தன்னைதானே சுட்டுக்கொன்றதாக அறிவிக்கப்பட்டது.
2009: பிரேஸிலில் இருந்து பிரான்ஸ் நோக்கி புறப்பட்ட பிரெஞ்சு விமானம் அத்திலாந்திக் சமுத்திரத்தில் வீழ்ந்ததால் விமானத்திலிருந்த 228 பேரும் பலி.
2014: நைஜீரியா, முபீ கால்பந்து மைதானத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதுலில் 40 பேர் பலியாகினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago