R.Tharaniya / 2025 ஓகஸ்ட் 10 , பி.ப. 05:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
1503 – இசுக்காட்லாந்து மன்னர் நான்காம் யேம்சு இங்கிலாந்து மன்னர் ஏழாம் என்றியின் மகள் மார்கரெட்டை எடின்பரோவில் திருமணம் செய்தார்.
1509 – கிருஷ்ணதேவராயன் விஜயநகரப் பேரரசராக சித்தூரில் முடிசூடினார். இவரது ஆட்சிக் காலமே பேரரசின் மிக உயர்ந்த நிலை ஆகக் கருதப்படுகிறது.
1588 – இங்கிலாந்தைக் கைப்பற்றும் முயற்சியில் மேற்கொள்ளப்பட்ட எசுப்பானிய பெரும் கடற்படையெடுப்பு முடிவுக்கு வந்தது.
1648 – முதலாம் இப்ராகிமுக்குப் பின்னர் உதுமானியப் பேரரசராக நான்காம் மெகுமெது முடி சூடினார்.
1848 – மாத்தளை கிளர்ச்சி: இலங்கையில் பிரித்தானியருக்கு எதிராக கிளர்ச்சி செய்த வீரபுரன் அப்பு தூக்கிலிடப்பட்டான்.
1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கெட்டிசுபெர்க்கு சண்டையில் தோல்வியடைந்த இராணுவத் தளபதி ராபர்ட் ஈ. லீ தனது பதவியைத் துறப்பதாக அமெரிக்கக் கூட்டமைப்புத் தலைவர் ஜெபர்சன் டேவிசிற்குக் கடிதம் எழுதினார்.தலைவர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.
1876 – தாமசு ஆல்வா எடிசன் மிமியோகிராஃப் என்ற பதிவு செய்யும் இயந்திரத்தைக் கண்டுபிடித்தார்.
1908 – வில்பர் ரைட் தனது முதலாவது வான்பயணத்தை பிரான்சில் "லெ மான்ஸ்" என்ற இடத்தில் மேற்கொண்டார். இதுவே ரைட் சகோதரர்களின் முதலாவது வான் பயணமாகும்.
1919 – ஆப்கானித்தானுக்கும், ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையே துராந்து எல்லைக்கோடு தொடர்பாக உடன்பாடு எட்டப்பட்டது.
1929 – கிராஃப் செப்பலின் என்ற செருமானிய போர்க் கப்பல் உலகைச் சுற்றும் தனது பயணத்தை ஆரம்பித்தது.
1942 – இந்திய தேசிய காங்கிரசு பம்பாயில் கூட்டிய மாநாட்டில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
1945 – நியூரம்பெர்க் தீர்ப்பாயத்தின் விதிமுறைகளை நிர்ணயிக்க பிரான்சு, ஐக்கிய இராச்சியம், சோவியத் ஒன்றியம், அமெரிக்கா ஆகிய நாடுகள் இலண்டனில் கூடின.
1947 – பாக்கித்தானின் தேசியக் கொடி அங்கீகரிக்கப்பட்டது.
1963 – இங்கிலாந்தில் இடம்பெற்ற பெரும் தொடருந்துக் கொள்ளையில் 15 பேரடங்கிய கொள்ளையர் குழு £ 2.6 மில்லியன் பணத்தைக் கொள்ளையடித்தது.
1967 – தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு (ஆசியான்) அமைப்பு இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பீன்சு, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய இணைந்து உருவாக்கப்பட்டது.
1973 – தென் கொரிய அரசியல்வாதி (பின்னர் தென் கொரிய அரசுத்தலைவர்) கிம் டாய் ஜுங் கடத்தப்பட்டார்.
1974 – வாட்டர்கேட் ஊழல்: அமெரிக்க அரசுத்தலைவர் ரிச்சார்ட் நிக்சன் தேசிய தொலைக்காட்சியில் தோன்றி அடுத்த நாள் முதள் தனது பதவியைத் துறக்கவிருப்பதாக அறிவித்தார்.
1988 – பர்மாவில் ரங்கூன் நகரில் மக்களாட்சியை வலியுறுத்தி எழுச்சி நிகழ்ந்தது. செப்டம்பர் 18 இல் இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் இறந்ததை அடுத்து இவ்வார்ப்பாட்டம் முடிவுக்கு வந்தது.
1989 – ஓர் இரகசிய இராணுவ விண்வெளித் திட்டத்தை முன்னெடுத்து நாசா கொலம்பியா விண்ணோடத்தை விண்ணுக்கு அனுப்பியது.
1990 – ஈராக் குவெய்த்தைக் கைப்பற்றி அதனைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது. சில நாட்களில் வளைகுடாப் போர் ஆரம்பமானது.
1991 – அக்காலத்தில் மிக உயர்ந்த அமைப்பு வார்சாவா வானொலித் தொலைத்தொடர்பு கோபுரம் இடிந்து வீழ்ந்தது.
1992 – யாழ்ப்பாணம், அராலியில் இடம்பெற்ற கண்ணிவெடித் தாக்குதலில் இலங்கை இராணுவ வட பிராந்தியத் தளபதி கொப்பேக்கடுவ கொல்லப்பட்டார்.
1993 – குவாமில் இடம்பெற்ற 7.8 அளவு நிலநடுக்கத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது, 71 பேர் காயமடைந்தனர்.
1998 – ஆப்கானித்தான் மசார் ஈ சரீப் நகரில் ஈரான் தூதரகம் தாலிபான்களால் தாக்கப்பட்டதில் பத்து தூதரக அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
2000 – அமெரிக்க உள்நாட்டுப் போரில் மூழ்கிய அமெரிக்க கூட்டமைப்பின் எச்.எல்.ஹன்லி என்ற நீர்மூழ்கிக் கப்பல் 136 ஆண்டுகளுக்குப் பின்னர் கடலினுள் இருந்து வெளியே எடுக்கப்பட்டது.
2006 – திருகோணமலைக்கு வடக்கே வெல்வெறிப் பகுதியில் கிளைமோர் தாக்குதலில் 2 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
2008 – சீனா, பெய்ஜிங் நகரில் 29-வது ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாயின.
2008 – போலந்தின் கிராக்கோவ்வில் இருந்து செக் குடியரசு பிராகா நோக்கிச் சென்ற யூரோசிட்டி விரைவுத் தொடர் வண்டி செக் குடியரசில் விபத்துக்குள்ளானதில் எட்டுப் பேர் உயிரிழந்தனர், 64 பேர் காயமடைந்தனர்.
2010 – சீனாவில் கான்சு மாகாணத்தில் வெள்ளப்பெருக்கு, மற்றும் மண்சரிவில் சிக்கி 1,400 பேர் உயிரிழந்தனர்.
2014 – மேற்கு ஆபிரிக்காவில் எபோலா நோய்ப் பரவல் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு பன்னாட்டு அளவில் பொதுநல அவசரகால நிலையை அறிவித்தது.
2016 – பாக்கித்தான் குவெட்டாவில் அரச மருத்துவமனை ஒன்றில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 70 முதல் 94 பேர் வரை கொல்லப்பட்டனர்.
13 minute ago
38 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
38 minute ago
45 minute ago