2024 மே 02, வியாழக்கிழமை

வரலாற்றில் இன்று : ஏப்ரல் 02

Janu   / 2024 ஏப்ரல் 02 , மு.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1801: நெப்போலியனின் படைகளிடம் வீழ்ந்துவிடும் என்ற அச்சத்தில் டென்மார்க் கடற்படைக் கப்பல்களை பிரிட்டன் தாக்கி அழித்தது.

1917: முதலாம் உலக யுத்தத்தில் ஜேர்மனிக்கு எதிராக போர் பிரகடனம் செய்யுமாறு அமெரிக்க நாடாளுமன்றத்திடம் ஜனாதிபதி வுட்ரோ வில்ஸன் கோரினார்.

1982: பிரிட்டனின் கட்டுப்பாட்டிலுள்ள பாக்லாந்து தீவுகள் மீது ஆர்ஜென்டீனா படையெடுத்தது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற போரில் 655 ஆர்ஜென்டீன படையினரும் 255 பிரித்தானிய படையினரும் பலியாகினர்.

1983: யாழ்ப்பாணம் அரச அதிபரின் செயலகத்தில் விடுதலைப் புலிகள் குண்டுத்தாக்குதல் நடத்தினர்.

2005: பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பர் இறையடி எய்தினார்.

2007: சொலமன் தீவுகளுக்கு அண்மையில் கடலின் அடியில் இடம்பெற்ற நிலநடுக்கம் காரணமாக எழுந்த ஆழிப்பேரலை இத்தீவுகளில் பலத்த சேதத்தை உண்டுபண்ணியது.

2007: ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற பெரும் வெள்ளப்பெருக்கினால் 512 பேர் கொல்லப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .