Janu / 2025 ஒக்டோபர் 20 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1803 – ஐக்கிய அமெரிக்கா லூசியானாவை பிரான்சிடம் இருந்து கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்த்துக்கு ஒப்புதல் அளித்தது.
1827 – ஒட்டோமான், எகிப்தியப் படைகள் பிரித்தானீய, பிரெஞ்சு, ரஷ்யக் கூட்டுப் படைகள் நவாரினோ என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தன. இது கிரேக்க விடுதலைப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தது.
1941 – கிறகுஜேவாச் படுகொலைகள்: சேர்பியாவின் கிறகுஜேவாச் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் நாசி ஜேர்மனியர்களினால் கொல்லப்பட்டனர்.
1944 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் இராணுவம் யுகோசுலாவியத் தலைநகர் பெல்கிரேட்டை ஜெர்மனியிடமிருந்து மீட்டது.
1944 – கிளீவ்லன்ட் நகரில் இயற்கை வாயுக் குழாய் வெடிப்பினால் 130 பெர் கொல்லப்பட்டனர்.
1955 – த லோட் ஒவ் த ரிங்ஸ் நூலின் கடைசிப் பாகமான ரிட்டர்ன் ஒஃப் த கிங் வெளியிடப்பட்டது.
1946 – புவேர்ட்டோ ரிக்கோ விடுதலைக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
1973 – சிட்னி ஒப்பேரா மாளிகை திறந்து வைக்கப்பட்டது.
1976 – மிசிசிப்பி ஆற்றில் பயணிகள் கப்பல் ஒன்று சரக்குக் கப்பலுடன் மோதியதில் 78 ப்பயணிகள் கொல்லப்பட்டனர். 18 பேர் மட்டும் தப்பினர்.
1982 – இலங்கையில் முதன் முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது.
1982 – மாஸ்கோவில் இடம்பெற்ற பன்னாட்டு உதைப்பந்தாட்டப் போட்டி ஒன்றில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 66 பேர் இறந்தனர்.
2001 – இலங்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற அரசியல் கூட்டணிக் கட்சி தொடங்கப்பட்டது.
2004 – முதலாவது உபுண்டு லினக்ஸ் வெளியிடப்பட்டது.
பிறப்பு
1469 – குரு நானக் தேவ், சீக்கிய மதத்தைத் தோற்றுவித்தவர் (இ. 1539)
1884 – டி. எஸ். சேனநாயக்கா, இலங்கையின் முதலாவது பிரதம மந்திரி (இ. 1952)
1923 – தொ. மு. சி. ரகுநாதன், எழுத்தாளர், திறனாய்வாளர் (இ. 2001)
1923 – வி. எஸ். அச்சுதானந்தன், கேரள முதல்வர்
1925 – ஆர்ட் புச்வால்ட், அமெரிக்க நகைச்சுவையாளர்
1946 – எல்ஃப்ரீத் ஜெலினெக், ஆஸ்திரிய எழுத்தாளர், நோபல் பரிசு பெற்றவர்
1954 – ந. செல்வராஜா, இலங்கையை சேர்ந்த நூலகவியலாளர், ஆய்வாளர்
1971 – ஸ்னூப் டாக், அமெரிக்க ராப் இசைக் கலைஞர்
1978 – வீரேந்தர் சேவாக், இந்தியத் துடுப்பாளர்

4 minute ago
16 minute ago
30 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
16 minute ago
30 minute ago
43 minute ago