Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Editorial / 2017 ஜூன் 20 , மு.ப. 12:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
1605: ரஷ்யாவின் சார் மன்னனான இரண்டாம் பியோடோர் படுகொலை செய்யப்பட்டார்.
1837: பிரித்தானிய அரசியாக விக்டோரியா முடிசூடினார்.
1862: ருமேனிய பிரதமர் பார்பு கடார்கியூ படுகொலை செய்யப்பட்டார்.
1877: உலகின் முதலாவது வர்த்தக தொலைபேசி சேவையை கனடாவில் அலெக்ஸாண்டர் கிரஹம்பெல் ஆரம்பித்தார்.
1919: பியூர்ட்டோ ரிக்கோவில் ஏற்பட்ட தீ விபத்தில் 150 பேர் கொல்லப்பட்டனர்.
1942: பெரும் இன அழிப்பு - கசிமிய்ர்சு பைச்சோவ்ஸ்கி மற்றும் மூவர் சுத்ஸ்டாப்பெல் காவலர்களாக உடையணிந்து அவுசுவித்சு வதைமுகாமில் இருந்து தப்பிச்சென்றனர்.
1944: பின்லாந்தை சரணடையுமாறு சோவியத் யூனியன் வலியுறுத்தியது.
1956: வெனிசுவேலாவைச் சேர்ந்த லீனியா 253 விமானம், நியூ செர்சி, அசுபரி பார்க் அருகே அத்திலாந்திங்குப் பெருங்கடலில் மூழ்கியதில் 74பேர் உயிரிழந்தனர்.
1960: பிரான்ஸிடமிருந்து மாலி கூட்டமைப்பு சுதந்திரம் பெற்றது. இது பின்னர் மாலி, செனிகல் என இரண்டாகப் பிரிந்தது.
1973: ஆர்ஜன்டீனா, புவெனஸ் ஐரிஸ் நகரில் இடதுசாரிகள் மீது குறிசுடுநர்கள் சுட்டதில் 13 பேர் கொல்லப்பட்டனர், 300இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
1990: ஈரானின் வடக்கே 7.4 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதில், 35000 – 50000 வரையானோர் உயிரிழந்தனர்.
1991: ஜேர்மன் தலைநகரம் போன் நகரலிருந்து மீண்டும் பேர்லினுக்கு மாற்றப்பட வேண்டுமென அந்நாட்டு நாடாளுமன்றம் தீர்மானித்தது.
2003: விக்கிமீடியா நிறுவனம் புளோரிடாவின் சென். பீட்டர்சுபர்க் நகரில் ஆரம்பமானது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago