Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Mithuna / 2023 டிசெம்பர் 23 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1688 – புரட்சியின் ஒரு கட்டமாக, இங்கிலாந்தின் இரண்டாம் ஜேமஸ் மன்னர் இங்கிலாந்தில் இருந்து பாரிசுக்குத் தப்பி ஓடினார்.
1783 – சியார்ச் வாசிங்டன் அமெரிக்க விடுதலைப் படையின் இராணுவத்தளபதி பதவியில் இருந்து விலகினார்.
1876 – கான்ஸ்டண்டினோபில் மாநாட்டின் ஆரம்ப நாளில் பால்கன் குடாவில் அரசியல் சீர்திருத்தத்திற்கு உடன்பாடு காணப்பட்டது.
1914 – முதலாம் உலகப் போர்: அவுஸ்திரேலிய, நியூசிலாந்துப் படைகள் கெய்ரோவில் தரையிறங்கினர்.
1916 – முதலாம் உலகப் போர்: எகிப்தின் சினாய்க் குடாவில் கூட்டுப் படைகள் துருக்கியப் படைகளுடன் இடம்பெற்ற சமரில் வெற்றி பெற்றன.
1941 – இரண்டாம் உலகப் போர்: 15 நாட்கள் சண்டைக்குப் பின்னர் ஜப்பானிய இராணுவம் வேக் தீவைக் கைப்பற்றியது.
1947 – முதலாவது டிரான்சிஸ்டர் பெல் ஆய்வுகூடத்தில் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.
1948 – ஏழு சப்பானியப் போர்க் குற்றவாளிகளுக்கு டோக்கியோவின் சுகோமோ சிறையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
1954 – முதலாவது மனித சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
1958 – டோக்கியோ கோபுரம், உலகின் மிகப்பெரிய இரும்பினாலான கோபுரம், திறக்கப்பட்டது.
1968 – வட கொரியாவில் 11 மாதங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த 82 அமெரிக்க மாலுமிகள் விடுவிக்கப்பட்டனர்.
1970 – நியூயார்க் நகரில் அமைந்துள்ள உலக வணிக மையத்தின் வடக்குக் கோபுரம் உலகின் மிக உயர்ந்த கட்டடமாக அறிவிக்கப்பட்டது.
1970 – காங்கோ மக்களாட்சிக் குடியரசு அதிகாரபூர்வமாக ஒரு-கட்சி நாடாக மாறியது.
1972 – தென்னமெரிக்காவில் ஆண்டீஸ் மலைத்தொடரில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிர் தப்பிய 16 பேர் 73 நாட்களுக்குப் பின்னர் காப்பாற்றப்பட்டனர்.
1979 – ஆப்கான் சோவியத் போர்: சோவியத் படையினர் ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலைக் கைப்பற்றினர்.
1986 – எங்கும் தரையிறங்காமல் முதன் முதலில் உலகைச் சுற்றி வந்த வொயேஜர் விமானம், டிக் ரூட்டன், ஜீனா யேகர் ஆகிய விமானிகளுடன் கலிபோர்னியாவில் தரையிறங்கியது.
1990 – 88மூ சுலோவீனிய மக்கள் யுகோசுலாவியாவில் இருந்து பிரிந்து செல்வதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
2003 – சீனாவின் சோங்கிங்கில் இடம்பெற்ற இயற்கை வாயு வெடி விபத்தில் 234 பேர் உயிரிழந்தனர்.
2005 – அசர்பைஜான் விமானம் புறப்பட்டு சில நிமிடங்களில் பக்கூ நகரில் வீழ்ந்து நொருங்கியதில் 23 பேர் உயிரிழந்தனர்.
2005 – சாட் சூடானுடன் போரை அறிவித்தது.
2007 – நேபாள இராச்சியம் கலைக்கப்பட்டு குடியரசாக மாறுவதற்கான உடன்பாடு எட்டப்பட்டது. பிரதமர் அரசுத்தலைவரானார்.
2014 – கூத்தபிரான், தமிழக நாடகக் கலைஞர் உயிரிழப்பு.
2 hours ago
14 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
14 Sep 2025