Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
S. Shivany / 2021 பெப்ரவரி 24 , மு.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
1386 – நேப்பில்சு மற்றும் அங்கேரி மன்னன் மூன்றாம் சார்லசு கொல்லப்பட்டான்.
1525 – எசுப்பானிய-ஆசுத்திரிய இராணுவம் பாவியா நகர சமரில் பிரெஞ்சுப் படைகளைத் தோற்கடித்தது.
1582 – கிரெகொரியின் நாட்காட்டி திருத்தந்தை 13வது கிரெகோரியினால் ஆணை ஓலை மூலம் அறிவிக்கப்பட்டது.
1739 – கர்னால் சமரில், ஈரானிய ஆட்சியாளர் நாதிர் ஷா இந்திய முகலாயப் பேரசர் முகம்மது ஷாவின் படைகளைத் தோற்கடித்தார்.
1809 – இலண்டன் ரோயல் நாடக அரங்கு தீக்கிரையானது.
1822 – உலகின் முதலாவது சுவாமிநாராயண் கோயில் அகமதாபாத்தில் திறக்கப்பட்டது.
1826 – பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கும் பர்மா மன்னர் ஆவாவுக்கும் இடையில் ஏற்பட்ட யாந்தபு உடன்பாட்டினை அடுத்து முதலாம் ஆங்கிலேய-பர்மியப் போர் முடிவுக்கு வந்தது.
1848 – பிரான்சின் லூயி-பிலிப் மன்னர் முடி துறந்தார்.
1854 – முதற்தடவையாக சிவப்புப் பென்னி என அழைக்கப்படும் துளைகளிடப்பட்ட அஞ்சல் தலை பிரித்தானியாவில் வெளியிடப்பட்டது.
1863 – அரிசோனா ஐக்கிய அமெரிக்காவின் பிராந்தியமாக அமைக்கப்பட்டது.
1875 – அவுஸ்திரேலியக் கிழக்குக் கரையில் கோத்தன்பேர்க் என்ற கப்பல் பவளத்திட்டு ஒன்றில் மோதி முழ்கியதில் 102 பேர் உயிரிழந்தனர்.
1881 – இலி ஆற்றுப் படுகையின் கிழக்குப் பகுதியை சீனாவுக்குக் கையளிக்கும் உடன்பாடு சீனாவுக்கும் உருசியாவுக்கும் இடையில் எட்டப்பட்டது.
1895 – கியூபாவில் புரட்சி வெடித்ததை அடுத்து விடுதலைக்கான கியூபா போர் ஆரம்பமானது. இது 1898 இல் எசுப்பானிய அமெரிக்கப் போருடன் முடிவுக்கு வந்தது.
1916 – கொரிய ஆளுநர் தொழு நோயாளிகளுக்கான மருத்துவமனையை ஆரம்பித்தார்.
1918 – எஸ்தோனியா விடுதலையை அறிவித்தது.
1920 – நாட்சி கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
1945 – எகிப்தியப் பிரதமர் அகமது மாகிர் பாசா நாடாளுமன்றத்தில் வைத்துக் கொல்லப்பட்டார்.
1949 – 1948 அரபு - இசுரேல் போர்: போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது.
1969 – மரைனர் 6 விண்கலம் செவ்வாய் கோளுக்கு ஏவப்பட்டது.
1981 – கிரேக்கத்தில் நிகழ்ந்த 6.7 ரிக்டர் நிலநடுக்கத்தினால் 16 பேர் உயிரிழந்தனர்.
1984 – லாஸ் ஏஞ்சலஸ் நகரில் ஆரம்பப் பள்ளி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு சிறுவர்கள் கொல்லப்பட்டனர், 12 பேர் காயமடைந்தனர்.
1989 – ஒனலுலுவில் இருந்து நியூசிலாந்து நோக்கிச் சென்ற யுனைட்டட் ஏர்லைன்சு விமானத்தின் சரக்கு வழிக் கதவு திடீரெனத் திறந்ததில் ஒன்பது பயணிகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர்.
1991 – வளைகுடாப் போர் ஆரம்பம்: தரைப் படைகள் சவூதி அரேபிய எல்லையைக் கடந்து ஈராக்கை அடைந்தன.
1999 – கிழக்கு சீனாவில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 61 பேர் உயிரிழந்தனர்.
2004 – வடக்கு மொரோக்கோவில் 6.3 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 628 பேர் உயிரிழந்தனர்.
2006 – பிலிப்பீன்சு அரசுத்தலைவர் குளோரியா மகபகல்-அர்ரொயோ நாட்டில் அவசரகாலச் சட்டத்தைப் பிறப்பித்தார்.
2007 – மணிப்பூர் தமெல்லாங் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 15 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
2008 – 32 ஆண்டுகளாக கியூபாவின் அரசுத்தலைவராக இருந்த பிடல் காஸ்ட்ரோ அப்பதவியில் இருந்து இளைப்பாறினார். இவர் கூபாவின் பொதுவுடைமைக் கட்சியின் தலைவராக அடுத்த மூன்று ஆண்டுகளுக்குப் பதவியில் இருந்தார்.
2009 – வாட்சப் கலிபோர்னியாவில் தொடங்கப்பட்டது.
2016 – கனடாவில் டாரா ஏர் விமானம் ஒன்று வீழ்ந்ததில், 23 பேர் உயிரிழ்ந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
34 minute ago
6 hours ago
8 hours ago