2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று: மார்ச் 01

S. Shivany   / 2021 மார்ச் 01 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1565 – இரியோ டி செனீரோ நகரம் அமைக்கப்பட்டது.

1628 – இங்கிலாந்தின் அனைத்து கவுண்டிகளும் இன்றைய நாளுக்குள் கப்பல் வரி கட்ட வேண்டும் என இங்கிலாந்தின் முதலாம் சார்லசு மன்னர் கட்டளை விடுத்தார்.

1700 – சுவீடன் தனது புதிய நாட்காட்டியை அறிமுகப்படுத்தியது.

1790 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு உறுதிப்படுத்தப்பட்டது.

1796 – டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி பத்தாவியக் குடியரசினால் தேசியமயமாக்கப்பட்டது.

1811 – எகிப்திய மன்னன் முகமது அலி கடைசி மம்லுக் அரச வம்சத்தவரைக் கொன்றான்.

1815 – எல்பா தீவில் இருந்து தப்பிய பிரான்சின் முதலாம் நெப்போலியன் பிரான்சு திரும்பினான்.

1845 – அமெரிக்க அரசுத்தலைவர் ஜோன் டைலர் டெக்சசுக் குடியரசை அமெரிக்காவுடன்ஸஸ இணைப்பதற்கு ஒப்புதல் அளித்தார்.

1867 – நெப்ராஸ்கா ஐக்கிய அமெரிக்காவின் 37ஆவது மாநிலமானது.

1869 – திமீத்ரி மெண்டெலீவ் தனது முதலாவது தனிம அட்டவணையை நிறைவேற்றி வெளியிட அனுப்பினார்.

1872 – அமெரிக்காவின் யெல்லோஸ்டோன் தேசியப் பூங்கா உலகின் முதலாவது தேசிய பூங்காவாக அங்கீகரிக்கப்பட்டது.

1873 – முதலாவது பயன்படத்தகுந்த தட்டச்சுப் பொறியை ரெமிங்டன் சகோதரர்கள் நியூ யோர்க்கில் தயாரித்தனர்.

1893 – நிக்கோலா தெஸ்லா வானொலி பற்றிய தனது முதலாவது பொதுமக்களுக்கான அறிமுகத்தை அமெரிக்காவின் செயின்ட் லூயிசு நகரில் நடத்தினார்.

1896 – எத்தியோப்பிய இராணுவத்தினர் இத்தாலியப் படைகளைத் தோற்கடித்தனர். முதலாவது இத்தாலிய-எத்தியோப்பியப் போர் முடிவுக்கு வந்தது.

1896 – என்றி பெக்கெரல் கதிரியக்கத்தைக் கண்டுபிடித்தார்.

1899 – இலங்கையில் குற்றவியல் தண்டனைச் சட்டவிதித் தொகுப்பு நடைமுறைக்கு வந்தது.

1901 – இலங்கையில் நான்காவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது. மொத்த தொகையான 3,565,954 இல் யாழ்ப்பாணத்தில் 33,879 பேர் பதிவாயினர்.

1910 – வாசிங்டனில் இடம்பெற்ற பனிச்சரிவில் கிங் கவுண்டி என்ற இடத்தில் தொடருந்து ஒன்று புதையுண்டதில் 96 பேர் உயிரிழந்தனர்.

1936 – ஊவர் அணை கட்டி முடிக்கப்பட்டது.

1939 – ஜப்பான் ஒசாக்காவில் இராணுவ வெடிபொருள் களஞ்சியம் ஒன்று வெடித்ததில் 94 பேர் கொல்லப்பட்டனர்.

1941 – இரண்டாம் உலகப் போர்: பல்கேரியா அச்சு நாடுகள் அணியில் இணைந்தது.

1942 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியப் படையினர் சாவகத் தீவில் இறங்கினர்.

1946 – இங்கிலாந்து வங்கி தேசியமயமாக்கப்பட்டது.

1948 – இலங்கையின் தெற்கே ஹோமகமைக்கும் கொட்டாவைக்கும் இடையே இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 52 பேர் படுகாயமடைந்தனர்.

1949 – இந்தோனேசிய இராணுவம் தலைநகர் யோக்யகர்த்தாவை இடச்சுக்களிடம் இருந்து ஆறு மணி நேரம் கைப்பற்றி வைத்திருந்தது.

1953 – சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலினுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. நான்கு நாட்களின் பின்னர் அவர் இறந்தார்.

1954 – அணுகுண்டு சோதனை: காசில் பிராவோ என்ற ஐதரசன் குண்டு பசிபிக் பெருங்கடலில் பிக்கினி திட்டில் வெடிக்கவைக்கப்பட்டதில் கதிரியக்க மாசு அமெரிக்காவில் ஏற்பட்டது.

1954 – ஐக்கிய அமெரிக்க காங்கிரஸ் மாளிகை மீது புவேர்ட்டோ ரிக்கோ தேசியவாதிகள் நடத்திய தாக்குதலில் ஐந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் காயமடைந்தனர்.

1956 – பன்னாட்டு வான் போக்குவரத்து சங்கம் ஒலியன்களின் அகரவரிசைக்கான நகல் வடிவை பன்னாட்டு குடிசார் வான்பயண அமைப்புக்காகத் தயாரித்தது.

1956 – கிழக்கு ஜேர்மனியின் தேசிய மக்கள் இராணுவம் அமைக்கப்பட்டது.

1961 – உகாண்டா சுயாட்சி பெற்று முதற்தடவையாக தேர்தல்கள் இடம்பெற்றன.

1966 – சோவியத்தின் வெனேரா 3 விண்கலம் வெள்ளி கோளில் மோதியது.வேறொரு கோளில் இறங்கிய முதலாவது விண்கலம் இதுவாகும்.

1971 – பாக்கித்தான் அரசுத்தலைவர் யாகியா கான் நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர்களைக் காலவரையறையின்றி ஒத்திவைத்தார். கிழக்குப் பாக்கித்தானில் பெரும் மக்கள் கலவரம் வெடித்தது.

1973 – சூடானில் சவுதி அரேபியாவின் தூதரகத்தை கறுப்பு செப்டம்பர் இயக்கத்தினர் தாக்கி மூன்று வெளிநாட்டு தூதுவர்களைப் பணயக்கைதிகளாக்கினர்.

1977 – சார்லி சாப்ளினின் உடல் சுவிட்சர்லாந்தில் அவரது கல்லறையில் இருந்து திருடப்பட்டது.

1980 – சனி கோளின் யானுசு என்ற சந்திரன் இருப்பதை வொயேஜர் 1 விண்கலம் உறுதி செய்தது.

1981 – ஐரியக் குடியரசுப் படை உறுப்பினர் பொபி சான்ட்ஸ் வட அயர்லாந்து சிறையில் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்தார்.

1991 – சதாம் உசைனுக்கு எதிரான கிளர்ச்சிகள் ஈராக்கில் ஆரம்பமாயின.

1992 – பொசுனியா எர்செகோவினா யூகொஸ்லாவியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

2003 – அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் தனது முதலாவது அமர்வை டென் ஹாக்கில் நடத்தியது.

2006 – ஆங்கில விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனை எட்டியது.

2007 – ஐக்கிய அமெரிக்காவின் தெற்கே சுழல் காற்று தாக்கியதில் 20 பேர் வரை உயிரிழந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X