2024 மே 02, வியாழக்கிழமை

வரலாற்றில் இன்று : மார்ச் 17

Janu   / 2024 மார்ச் 17 , மு.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1776 – அமெரிக்கப் புரட்சி: பிரித்தானியப் படைகள் மசாசுசெட்சின் பாஸ்டன் நகர முற்றுகையை முடித்து வெளியேறினர்.

1805 – நெப்போலியன் தலைவனாக இருந்த இத்தாலியக் குடியரசு, இத்தாலியப் பேரரசு ஆனது. நெப்போலியன் அதன் பேரரசன் ஆனான்.

1824 – இலண்டனில் இடம்பெற்ற ஆங்கிலோ-இடச்சு உடன்பாட்டை அடுத்து மலாய் தீவுக் கூட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. மலாய் தீபகற்பம் பிரித்தானியரின் கீழும், சுமாத்திரா, சாவகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் இடச்சின் கீழும் வநதன.

1845 – இறப்பர் பட்டி கண்டுபிடிக்கப்பட்டது.

1861 – இத்தாலி இராச்சியம் உருவானது.

1891 – பிரித்தானியாவின் யூட்டோப்பியா என்ற கப்பல் ஆன்சன் என்ற அவுஸ்திரேலியக் கப்பலுடன் கிப்ரால்ட்டர் கரையில் மூழ்கியதில் 562 பேர் உயிரிழந்தனர்.

1919 – றோவ்லட் சட்டத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வதற்காக மகாத்மா காந்தி சென்னை வந்தார்.

1939 – இரண்டாம் சீன-ஜப்பானியப் போர்: குவோமின்டாங், சப்பான் இரண்டுக்கும் இடையே நான்சாங் சமர் இடம்பெற்றது.

1941 – வாசிங்டன் தேசிய கலைக்காட்சியகம் அரசுத்தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட்டினால் திறந்து வைக்கப்பட்டது.

1942 – பெரும் இன அழிப்பு: மேற்கு உக்ரேனின் லிவிவ் என்ற இடத்தைச் சேர்ந்த யூதர்கள் கிழக்கு போலந்தில் பெல்செக் என்ற இடத்தில் வைத்து நாட்சி செருமனியரினால் நச்சு வாயு செலுத்தப்பட்டுக் கொல்லப்பட்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .