Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
S. Shivany / 2021 மார்ச் 18 , மு.ப. 08:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
1229 – 6-வது சிலுவைப் போர்: புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் பிரெடெரிக் தன்னை எருசலேமின் மன்னராக அறிவித்தார்.
1241 – போலந்தின் கிராக்கோவ் நகரம் மங்கோலியர்களினால் முற்றுகையிடப்பட்டு சேதமாக்கப்பட்டது.
1314 – தேவாலய புனித வீரர்களின் 23-வதும், கடைசியுமான வீரர் யாக் டி மோலே மரத்தில் கட்டப்பட்டு எரியூட்டிக் கொல்லப்பட்டார்.
1438 – ஆப்சுபர்கின் இரண்டாம் ஆல்பர்ட் புனித உரோமைப் பேரரசராக முடிசூடினார்.
1608 – சுசேனியசு எத்தியோப்பியாவின் பேரரசராக முடிசூடினார்.
1766 – அமெரிக்கப் புரட்சி: ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம் முத்திரை வரியை நீக்கியது.
1834 – இங்கிலாந்தின் டோர்செட் நகரில் ஆறு பண்ணைத் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு அவுஸ்திரேலியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.
1850 – அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
1874 – குறிப்பிடத்தக்க வணிக உரிமைகளை வழங்கும் உடன்பாட்டில் அவாய் ஐக்கிய அமெரிக்காவுடன் கையெழுத்திட்டது.
1913 – கிரேக்கத்தின் முதலாவது ஜோர்ஜ் மன்னர் படுகொலை செய்யப்பட்டார்.
1915 – முதலாம் உலகப் போர்: கலிப்பொலி சமரில் பெரும் கடற்படைத் தாக்குதல் இடம்பெற்றது. பிரித்தானிய மற்றும் பிரெஞ்சுக் கப்பல்கள் மூன்று மூழ்கடிக்கப்பட்டன.
1922 – ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்ட மகாத்மா காந்தி ஆறு ஆண்டு சிறைத்தண்டனை பெற்றார். இரண்டு ஆண்டுகளில் விடுதலை ஆனார்.
1925 – அமெரிக்காவின் மிசூரி, இலினோய், இந்தியானா மாநிலங்களில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக 695 பேர் இறந்தனர்.
1937 – எசுப்பானிய உள்நாட்டுப் போர்: எசுப்பானியக் குடியரசுப் படைகள் இத்தாலியப் படைகளை குவாடலசாரா சமரில் வென்றன.
1937 – அமெரிக்காவின் டெக்சசு மாநிலத்தில் நியூ லண்டன் நகரப் பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட இயற்கை வாயு வெடிப்பில் 295 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உயிரிழந்தனர்.
1940 – இரண்டாம் உலகப் போர்: பிரான்சையும் ஐக்கிய இராச்சியத்தையும் எதிர்த்துப் போரிட இட்லரும் பெனிட்டோ முசோலினியும் கூட்டிணைந்தனர்.
1944 – இத்தாலியில் விசுவியசு எரிமலை தீ கக்கியதில் 26 பேர் இறந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறினர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: 1,250 அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள் பெர்லின் நகரைத் தாக்கின.
1948 – சோவியத் ஆலோசகர்கள் யுகோசுலாவியாவில் இருந்து வெளியேறினர். இது டீட்டோ–இசுட்டாலின் பிளவுக்கான முன்னோடி எனக் கருதப்பட்டது.
1953 – மேற்கு துருக்கியில் இடம்பெற்ற நிலநடுக்கம் காரணமாக 265 பேர் உயிரிழந்தனர்.
1962 – 1954 இல் ஆரம்பமான அல்சீரிய விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது.
1965 – சோவியத் விண்ணோடி அலெக்சி லியோனொவ் வஸ்கோத் 2 விண்கலத்தின் வெளியே 12 நிமிடங்கள் நடமாடி விண்வெளியில் நடந்த முதல் மனிதர் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.
1970 – கம்போடியாவின் இளவரசர் நொரடோம் சீயனூக் பதவியில் இருந்து அகற்றப்பட்டு லொன் நொல் கம்போடியாவின் பிரதமரானார்.
1971 – பெருவில் நிலச்சரிவு காரணமாக 200 பேர் உயிரிழந்தனர்.
1980 – உருசியாவில் வஸ்தோக்-2எம் ஏவூர்தி ஏவப்படுகையில் வெடித்ததில் 48 பேர் உயிரிழந்தனர்.
1989 – எகிப்தில் 4,400 ஆண்டுகள் பழமையான பதனிடப்பட்ட உடல் பிரமிட் ஒன்றினுள் கண்டுபிடிக்கப்பட்டது.
1990 – அமெரிக்காவில், பாஸ்டன் அருங்காட்சியகம் ஒன்றில் இருந்து கூ500 மில்லியன் பெறுமதியான 12 ஓவியங்கள் திருடப்பட்டன.
1990 – கிழக்கு செருமனியில் 1932 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதற் தடவையாக மக்களாட்சித் தேர்தல்கள் இடம்பெற்றன.
1994 – பொசுனியாவின் பொசுனியாக்களும் குரொவாசியர்களும் போரை முடிவுக்குக் கொண்டு வர அமைதி உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டன.
1996 – பிலிப்பீன்சு, குவிசோன் நகரில் இரவு விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 162 பேர் இறந்தனர்.
1997 – துருக்கிக்கு சென்று கொண்டிருந்த உருசியாவின் அந்தோனொவ் ஏஎன்-24 விமானம் வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த 50 பேரும் உயிரிழந்தனர்.
2003 – ஐக்கிய அமெரிக்கா ஈராக்க்குடன் போரை ஆரம்பித்தது. ஈராக்கின் மத்திய வங்கியில் இருந்து 1 பில்லியன் பெறுமதியான பணம் சதாம் உசைனினாலும் அவரது குடும்பத்தினராலும் எடுத்துச் செல்லப்பட்டது.
2003 – விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் ஆறாம் சுற்றுப் பேச்சுக்கள் சப்பான் ஆக்கோன் நகரில் ஆரம்பமாயின.
2014 – உருசிய, கிரிமியா நாடாளுமன்றங்கள் இணைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்துட்டன.
2015 – தூனிசியா, பார்டோ தேசிய அருங்காட்சியகம் தாக்கப்பட்டதில் 23 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
21 minute ago
48 minute ago
6 hours ago