Lenin Raj / 2026 மே 05 , பி.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

நடிகையும், திமுக ஆதரவாளருமான ஜூலி த.வெ.க. தலைவர் விஜய்யின் வெற்றி குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "எங்க ஜூலியை காணோம் என காணவில்லை போஸ்டர் ஒட்டுகிறார்கள். நான் எங்கும் செல்லவில்லை. நான் இங்குதான் இருக்கிறேன். உங்கள் வெற்றிக்காக எனது வாழ்த்துகள். அரசியலில் நிரந்தர வெற்றியும் கிடையாது; நிரந்தர தோல்வியும் கிடையாது. இது நன்கு தெரிந்த கட்சி திமுக. நாங்கள் வெற்றி பெற்று உட்கார்ந்ததை விட தோல்வி அடைந்து எதிர்க்கட்சியாக அமர்ந்ததுதான் அதிகம். இதற்கெல்லாம் திமுக துவண்டுவிடாது. எதிர்க்கட்சியாக திமுக இருந்தால் அது எவ்வளவு ஆபத்தானது என்பது உங்களுக்குத் தெரியாது. சண்டை செய்து பழகியவர்கள் நாங்கள். எதற்கும் தயாராக இருக்கிறோம். களத்திற்கு இப்போதானே வந்திருக்கிறீர்கள். இனிதான் ஆட்டமே சூடுபிடிக்கப்போகிறது" எனப் பதிவிட்டுள்ளார்.
33 minute ago
43 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
43 minute ago
48 minute ago