2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

’’பார்வை குறைபாடு சாதனைக்குத் தடையல்ல’’ (வீடியோ)

Mayu   / 2026 ஏப்ரல் 07 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

"பார்வை குறைபாடு சாதனைக்குத் தடையல்ல" என்பதை உலகுக்கு நிரூபிக்கும் வகையில், இலங்கையின் தலைமன்னாரிலிருந்து இந்தியாவிலுள்ள தனுஷ்கோடி அரிச்சல்முனை வரையிலான பாக் நீரிணை கடற்பகுதியை, 17 வயது பார்வையற்ற வீராங்கனை ஈஸ்வரி நீந்திக் கடந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த கமலேஷ் விட்டல்ராவ் பாண்டே - அருணா தம்பதியினரின் மகளான ஈஸ்வரி, பிறவியிலேயே முழுமையாகப் பார்வைத் திறனற்றவர். தற்போது 11-ஆம் வகுப்பு பயின்று வரும் இவர், தனது விடாமுயற்சியால் தேசிய அளவிலான பாரா ஒலிம்பிக் நீச்சல் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத் துறையின் அனுமதியுடன், நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) ராமேஸ்வரத்திலிருந்து 20 பேர் கொண்ட குழுவினருடன் ஈஸ்வரி தலைமன்னாருக்குப் புறப்பட்டார்.

ஆரம்பம்: திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணி (தலைமன்னார்).

நிறைவு: திங்கட்கிழமை பிற்பகல் 03.15 மணி (அரிச்சல்முனை).

எடுத்துக்கொண்ட நேரம்: 11 மணித்தியாலங்கள் 15 நிமிடங்கள்.

தூரம்: சுமார் 30 கிலோமீட்டர்.

முழுமையான பார்வைத் திறனற்ற ஒரு மாற்றுத்திறனாளி, கடலில் இவ்வளவு அதிக தூரத்தை இவ்வளவு குறைந்த நேரத்தில் நீந்திக் கடப்பது இதுவே முதல்முறையாகும். அரிச்சல்முனை கடற்கரையை அவர் வந்தடைந்த போது, இந்திய கடலோரக் காவல் படையினர் மற்றும் பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

எஸ்.ஆர்.லெம்பேட்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .