J.A. George / 2022 டிசெம்பர் 05 , பி.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னர், பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் தற்போது குறைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
நாவலப்பிட்டி தொகுதியின் வெலிகம்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே மஹிந்தானந்த அளுத்கமகே இவ்வாறு கூறியுள்ளார்.
அத்துடன், ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி பதவியை ஏற்ற பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியை முன்னேற்றவோ, அக்கட்சியின் அங்கத்துவத்தை அதிகரிக்கவோ செயற்படாமல் நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாட்டில் நிலவும் எரிவாயு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் 2½ வருடங்களில் நாட்டின் பொருளாதார நிலைமையை மேம்படுத்த தற்போதைய ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
58 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
4 hours ago
4 hours ago