2022 ஜூலை 06, புதன்கிழமை

திருக்குமரன் நடேசன் ஆணைக்குழுவில் முன்னிலை (Video)

J.A. George   / 2021 ஒக்டோபர் 08 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் பிரதியமைச்சர் நிரூபமா ராஜபக்ஷவின் கணவரான திருக்குமரன் நடேசன், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.

சர்வதேச ரீதியில் சர்ச்சையை ஏற்படுத்திய, பென்டோரா ஆவணத்தில் திருக்குமரன் நடேசன் மற்றும் அவரது மனைவி நிரூபமா ராஜபக்ஷ ஆகியோரின் பெயர்கள் வெளியிடப்பட்டிருந்தன.

இந்நிலையில், குறித்த விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில், அவர் இன்று(08) காலை முன்னிலையாகியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்து ஒரு மாதத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி, அண்மையில் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .