2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

வவுனியா இளைஞனுக்கு வலைவீச்சு

J.A. George   / 2021 ஜூன் 10 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா, சாந்தசோலை பிரதேசத்தில் பொது சுகாதார பரிசோதகரை தாக்கிய சந்தேக நபர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பொது சுகாதாரப் பரிசோதகரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக  பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

முகக்கவசம் அணியாமல் சென்ற நபரிடம் விசாரணையில் ஈடுபட்ட போது பொது சுகாதார பரிசோதகர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் கூறினார்.

25 வயதுடைய இளைஞனே பொது சுகாதார பரிசோதகரை தாக்கியுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .