2022 ஜனவரி 25, செவ்வாய்க்கிழமை

பாலியல் வன்கொடுமை உள்ளாகியுள்ள உயிரிழந்த சிறுமி (Video)

J.A. George   / 2021 ஜூலை 19 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப் புரிந்த நிலையில், தீ காயங்களுடன் வைத்தியசாலையில் உயிரிழந்த சிறுமி பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண இன்று (19) தெரிவித்தார்.

இதேவேளை, சிறுமியின் மரணம் குறித்து பல்வேறு தரப்பிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

பொரளை பொலிஸார் மற்றும் கொழும்பு தெற்கு பெண்கள் மற்றும் சிறுவர் விசாரணை பிரிவு என்பன இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, சிறுமியை டயகம பகுதியிலிருந்து கொழும்புக்கு  வீட்டு வேலைக்காக அழைத்து வந்த நபரிடம் இன்று வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளதாகவும் அவர் கூறினார்.

அதேநேரம்  ரிஷாட் பதியூதீனின் மனைவியின் தாய் மற்றும் தந்தை ஆகியோரிடம் நேற்று (18) மீண்டும் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.

அத்துடன், சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை நீதிமன்றத்தில்  தாக்கல் செய்யப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணியாற்றிய டயகம பகுதியை சேரந்த சிறுமி, தீகாயங்களுடன் கடந்த 3ம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த 15ம் திகதி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X