2021 நவம்பர் 29, திங்கட்கிழமை

நீண்ட வார இறுதி; இராணுவத் தளபதி எச்சரிக்கை

J.A. George   / 2021 ஜூலை 22 , பி.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் நீண்ட வார இறுதி நாட்களில் மக்கள் ஒன்று கூடினால் ஆபத்தான சூழ்நிலை ஏற்படலாம் என, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தொற்றாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்தும் குறைவடையாத நிலை உள்ளதால் மக்கள் இந்த விடயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீண்ட வார இறுதி நெருங்கி வருவதைக் குறிப்பிட்ட, இராணுவத் தளபதி, கொரோனாவின் மூன்றாம் அலை புத்தாண்டு காலத்தில் தொடங்கியதை நினைவுபடுத்தியுள்ளார்.

இது போன்ற நீண்ட வார இறுதிகளில் மக்கள் ஒன்று கூடினால் நிலைமை ஆபத்தானதாக மாறும் என்று அவர் எச்சரித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .