J.A. George / 2022 ஜூலை 28 , மு.ப. 09:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
அம்பலாங்கொட, கலகொட பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
வீட்டில் இடம்பெற்ற இறுதிச் சடங்கு நிகழ்வின் போது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் டி56 துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
அத்துடன், கம்பஹா மேல் நீதிமன்ற வளாகத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சமன் ரோஹித பெரேரா என அழைக்கப்படும் ‘பஸ் பொட்டா’ துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, இரத்மலானை சில்வா மாவத்தையில் உள்ள குடியிருப்பில் நேற்று இரவு நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு T56 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளது. 30 வயதுடைய ஆணின் சடலம் களுபோவில போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்கள் குறித்து அந்தந்தப் பகுதிக்கு பொறுப்பான பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
16 minute ago
27 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
27 minute ago
1 hours ago