2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

J.A. George   / 2021 பெப்ரவரி 11 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாளுக்குநாள் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றமை அபாய நிலையை வெளிப்படுத்துவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த காலங்களில் நாளாந்த நோயாளர்கள் எண்ணிக்கை 500 முதல் 600 அளவில் பதிவான நிலையில், தற்போது 900 ஆக அதிகரித்துள்ளதாக சங்கத்தின் ஊடகப் பேச்சாளர், வைத்தியர் சமந்த ஆனந்த சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, இதனை கவனத்தில் எடுத்து விஞ்ஞான ரீதியாக ஆய்வுசெய்யப்பட வேண்டும் என்றும், வெளி மாவட்டங்களின் காணப்படும் அபாய நிலை தொடர்பில், ஆய்வுகளை மேற்கொண்டு பொதுமக்களை தெளிவுபடுத்த வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X