Lenin Raj / 2026 மார்ச் 13 , மு.ப. 10:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ் சதீஸ்
ஹற்றன்-போடைஸ் பிரதான வீதியின் போடைஸ் என்சி பிரிவில் இன்று (12) முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்ற பாரிய விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
டிக்கோயாவிலிருந்து டயகம நோக்கி தோட்டப் பகுதிகளில் வியாபார நடவடிக்கைகளுக்காக பயணித்த முச்சக்கர வண்டி, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 70 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
முச்சக்கரவண்டியிலில் பயணித்த சாரதி உட்பட மூவர் படுகாயமடைந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முச்சக்கர வண்டி பலத்த சேதமடைந்துள்ளது.
விபத்துக்குள்ளான வாகனத்தை மீட்கும் பணியின் போது, முச்சக்கர வண்டியானது திடீரென மீண்டும் கீழ் நோக்கி உருண்டது.
இதன்போது அங்கிருந்த நபர் ஒருவர் முச்சக்கர வண்டியில் சிக்காமல் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.
இந்த அதிர்ச்சிகரமான காட்சி அங்கிருந்தவர்களின் கேமராவில் பதிவாகியுள்ளது.
அதிக வேகமே விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஹற்றன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
27 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
37 minute ago