2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

அம்பாறை மாவட்டத்தில் 1500 இற்கு மேற்பட்டோர் புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற செல்லவுள்ளனர்

Super User   / 2010 ஒக்டோபர் 16 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)

புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக அம்பாறை மாவட்டத்திலிருந்து 1500 இற்கும் மேற்பட்டோர் இவ்வருடம் புனித மக்கா செல்லவுள்ளனர்.

கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, மருதமுனை, நிந்தவூர், சாய்ந்தமருது, பாலமுனை, ஒலுவில், பொத்துவில், இறக்காமம், நற்பிட்டிமுனை, மத்தியமுகாம், மாளிகைக்காடு மற்றும் மாவடிப்பள்ளி ஆகிய பிரதேசங்களிலிருந்து இம்முறை கூடுதலானோர் ஹஜ் கடமைக்காக செல்லள்ளனர்.

ஹஜ் யாத்திரை மேற்கொள்ளவுள்ளோருக்கான கருத்தரங்ககள், மார்க்கச் சொற்பொழிகள்,  ஹஜ் சடங்குகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பான விளக்கங்கள் என்பன ஹஜ் பயண முகவர் நிறுவனங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் ஊடாக நடத்தப்பட்டு வருகின்றது.

முதலாவது ஹஜ் யாத்திரைக் குழுவினர் 17ஆம் திகதி மக்காவிற்குச் புறப்பட்டுச் செல்லவுள்ளனர்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .