2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கல்வி துறையில் பிரதான 5 விடயங்களில் மாற்றம்

Kogilavani   / 2012 மே 29 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)

கல்வித் துறையில் இந்த வருடத்திலிருந்து 5 பிரதான விடயங்களில் மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளதாக கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரியின் 20 ஆவது வருட நிறைவினைக் கொண்டாடும் வகையில் கல்லூரி மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'தொழில்நுட்பம், ஆங்கிலம் - ஏனைய மொழிகள், விஞ்ஞானமும் கணிதமும், அழகியற் கல்வி மற்றும் விளையாட்டு ஆகிய விடயங்களிலே மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளோம்.

இவைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி எமது மாணவர்களுக்கான கல்வியினை வழங்கும் போது, நமது மாணவர்களை எல்லாவற்றுக்கும் ஏற்றாற்போல், இந்த நாட்டின் சிறந்த மக்களாக மாற்ற முடியும்.

நமது நாட்டினைச் சேர்ந்த 30 லட்சத்துக்கும் மேற்பட்ட கற்றவர்கள் அமெரிக்கா, பிருத்தானியா, அவுஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் தொழில்புரிந்து எமது நாட்டுக்கு அந்நிய செலாவனியை பெற்றுத் தருகின்றார்கள்.

எனவே, நமது நாடு, சமூகம் என்பவை கடந்து உலகளாவிய ரீதியில் நாம் வெற்றிகரமாகச் செயற்படும் வகையில் எமது கல்வித் துறையினை மாற்றியமைக்க வேண்டும்' என்றார்.

இதன்போது, கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன மற்றும் முன்னாள் அமைச்சரும், அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரியின் உருவாக்கதற்கு காரணக்கர்த்தாக்களில்  ஒருவருமான ஏ.ஆர்.ஏ. மன்சூர் ஆகியோர் பொன்னாடை போர்த்தி  கௌரவிக்கப்பட்டனர்.





You May Also Like

  Comments - 0

  • தினகரன் Tuesday, 29 May 2012 04:26 PM

    ஐயா...அந்த Z புள்ளி சம்பந்தமா ஏதும்.....

    Reply : 0       0

    rifasil**add Wednesday, 30 May 2012 05:23 PM

    மாத்தயா! மாத்துங்க .....மாத்துங்க ....மாத்தின கையோட மாஸ்டர் மார்ர சம்பளத்தையும் மாத்தினா நல்லா இருக்கும்..

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .