Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 நவம்பர் 30 , மு.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
கிழக்கு மாகாணத்தில் விசேடமாக அக்கரைப்பற்று கல்வி வலயம் சிறந்ததொரு வலயமாக இன்று பேசப்பட்டு வருகின்றது. இது எனக்குமட்டுமல்ல அம்பாறை மாவட்டத்துக்கும் பெருமை தரக்கூடியவகையில் அமைந்துள்ளது.மேலும்,அக்கரைப்பற்று ஹிரா ஆங்கில பாடசாலை வளச்சிக்காக என்னாலான உதவிகளை செய்யத்தயாராக இருக்கின்றேன்.அந்தவகையில்,இப்பாடசாலையின் சுற்றுமதில் அமைப்புக்காக 3 இலட்சம் ரூபாய் வழங்கியுள்ளேன் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.மொஹமட் நஸீர் தெரிவித்தார்.
அக்கரைப்பற்று ஹிரா ஆங்கில பாடசாலை மாணவர்களின் 2015ஆம் ஆண்டின் விடுகை விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.உதுமாலெப்பை தலைமையில் அக்கரைப்பற்று அதாவுல்லா அரங்கில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
பாலர் பாடசாலைகள் யாவும் இலங்கையில் மிக முக்கியமாக சிறந்து விளங்கும் நிறுவனங்களாக உள்ளன. அதிலும் ஆங்கில பாலர் பாடசாலையை நடத்தி செல்வதென்றால் ஒரு பாரிய சவால்களுக்கு மத்தியில்தான் கொண்டு செல்ல வேண்டியுள்ளது.
மாணவர்களின் எதிர்கால வளர்ச்சியையும் அவர்களின் வாழ்க்கையையும் இந்த பாலர் பாடசாலைகள் தான் நிர்ணயிக்கின்றன என்று சொன்னால் அது மிகையாகாது.
அவர்களின் பல்கலைக்கழக கல்விக்கும் வளர்ச்சியை பாலர் பாடசாலையின் ஆரம்பக் கல்வியே வித்திடுகின்றது. இந்த பாலர் பாடசாலைகளில் கல்வி கற்றுக்கொடுக்கின்ற ஆசிரியர்கள் பாரிய சவால்களை சந்தித்துத்துதான் அவர்களின் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிழக்கு மாகாணத்தில் பாலர் பாடசாலைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக ஒரு தனியான பணியகம் இயங்கி வருகின்றது. அதற்காக ஒரு நியதிச்சட்டமும் உருவாக்கி இயக்கம்பெற்று வருவதை நாமறிவோம்.
அதற்கு பெற்றோர்களாகிய நாம் ஒத்துழைப்புகளையும் ஒத்தாசைகளையும் வழங்கி வந்தால்தான் எமது பாலர்களின் கல்வி வளர்ச்சியையும் எதிர்கால வளர்ச்சியையும் ஒரு முன்னேற்றப்பாதைக்கு இட்டுச்செல்லலாம் என்றார்.
2 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago