2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 07 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில், எம்.எஸ்.எம்.ஹனீபா

அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று வியாழக்கிழமை அப்பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

சுகாதாரப் பிரதியமைச்சர் பைஷால் காசீம் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன. இதில் 100 நாள் வேலைத்திட்டங்களுக்காக 32 மில்லியன் ரூபாய் கிடைக்கப் பெற்று 32 கிராம அலுவலகர் பிரிவுகளிலும் 32 வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இந்த இந்தவேலைத்திட்டங்கள் 31.36 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டு முடிவுறுத்தப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளரினால் தெரிவிக்கப்பட்டது.

மேலும், கடந்த முறை வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படாமலுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டன.

எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள வீதி அபிவிருத்தி, வடிகாலமைப்பு மற்றும் வடிகாலமைப்புச் சீராக்கல், மீனவர் பிரச்சினை, மீனவர்களின் சந்தைப்படுத்தலுக்கான இலகு வழிமுறைகளை ஏற்படுத்தல், சுகாதாரத்துறையை விருத்தி செய்தல், வைத்தியசாலைகளுக்கு அம்பியூலன்ஸ் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தல், கல்வித்துறை அபிவிருத்தி, தீகவாபி பிரதேசத்தில் மின்சாரவேலி அமைத்தல், விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உடனடித்தீர்வு காணல் உள்ளிட்டவை தொடர்பில் இதன்போது முன்வைக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X