2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'அட்டாளைச்சேனையில் 97 மாணவர்கள் பாடசாலைகளிலிருந்து இடைவிலகியுள்ளனர்'

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 12 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

கடந்த வருடத்தில் அட்டாளைச்சேனைப் பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து 97 மாணவர்கள் பாடசாலைகளிலிருந்து இடைவிலகியுள்ளதுடன்,  இவர்களில் அநேகமானோர்; கடற்கரை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் அக்கரைப்பற்றுப் பிராந்திய சிறுவர் நன்னடத்தை உத்தியோகஸ்;தர் திருமதி ஏ.ஆர்.றபானா தெரிவித்தார்.

வளமான சிறுவர் பாதுகாப்புக் கிராமங்களை உருவாக்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் பிரதேச மட்டத்தில் நடைமுறைப்படுத்துப்பட்டுவரும் நிகழ்வு, அட்டாளைச்சேனையில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் இதனைக் கூறினார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், 'பெண்களின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார நெருக்கடி போன்றவை காரணமாக அதிகமான மாணவர்கள் தொழில்களுக்கு செல்ல நேரிடுகின்றது. இக்காலகட்டத்தில் பாடசாலைகளிலிருந்து இடைவிலகும் மாணவர்களின் அளவு கணிசமாக அதிகரித்து வருகின்றமை கவலைக்குரிய விடயமாகும்' என்றார்.

'இதேவேளை, இப்பிரதேசங்களில் சிறுவர் துஷ்பிரயோகங்களும் அதிகளவில் இடம்பெறுவதாக தகவல்கள் கிடைக்கின்றன.
மற்றவர்களின் பிள்ளைகளைப் பாதுகாப்பது எமக்கும் சமூகத்துக்முள்ள கடமையாகக் காணப்படுகின்றது' எனவும் அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X