Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2016 ஜனவரி 22 , மு.ப. 08:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-யூ.எல்.மப்றூக்
அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் குளிசை உள்ளிட்ட மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் இதனால், கணிசமான மருந்துகளை மருந்தகங்களில் பெற்றுக்கொள்ளுமாறு கூறி வெளிநோயாளர்களுக்கு வைத்தியர்கள் மருந்துச்சீட்டுக்களை எழுதிக்கொடுப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
இவ்வாறு மருந்தகங்களில் மருந்துகளை வாங்குவது தொடர்பில் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள மக்கள் பாதிப்பை எதிர்நோக்குகின்றனர்.
அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில், மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுகின்றமைi யஅவ்வைத்தியசாலைத் தரப்பினரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த வைத்தியசாலைக்கு நாளொன்றுக்கு 130 தொடக்கம் 150 வரையான வெளிநோயாளர்கள் சிகிச்சை பெறுவதற்காக வருகின்றனர். இந்த நிலையில், வாரத்தில் மூன்று நாட்கள் வெளிநோயாளர் பிரிவில் மேலதிக சிகிச்சைகளும் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமைகளில் கர்ப்பிணிகளுக்கும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில்;; தொற்றா நோயாளர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகின்றது. இவ்வாறு மேலதிக சிகிச்சைகளுக்காக குறித்த ஒவ்வொரு நாட்களும் சுமார் 100 பேர் வருகை தருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான நிலையில் அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுகின்றமையினால், இங்கு வரும் வெளிநோயாளர்களுக்கான மருந்துகளை வழங்க முடியாமலுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இம்முறை வரவு - செலவுத் திட்டத்தில் மிக அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட துறைகளில் சுகாதாரத்துறையும் ஒன்றாகும். ஆயினும், மேற்படி வைத்தியசாலைக்குப் போதுமான மருந்துகளை ஏன் வழங்க முடியாமல் உள்ளது என்றும் பொதுமக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
40 minute ago
1 hours ago