2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'அதிகமான பெண்களின் இறப்புக்கு மார்பகப் புற்றுநோயே காரணம்'

Thipaan   / 2016 ஜனவரி 02 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.கே.றஹ்மத்துல்லா, பைஷல் இஸ்மாயில்

இன்று அதிகமான பெண்களின் இறப்புக்கு காரணமாக அமைவது மார்பக மற்றும் கர்ப்பப்பை புற்று நோய்களே என கண்டறியப்பட்டுள்ளதாக, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.எல்.அலாவுதீன் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையில் வெள்ளிக்கிழமை(01) இரவு இடம்பெற்ற புதுவருட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

35 வயதுக்கு மேற்பட்ட யுவதிகள் தமது பிரதேசங்களிலுள்ள பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் மார்பக மற்றும் கற்பப்பை புற்று நோய் தொடர்பில் பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியமாகும்.

இது தொடர்பில் மக்களுக்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்வது அவசியமாகும். இந்நோய் தொடர்பில் ஆரம்பத்தில் கண்டறியப்படும் போது அதற்கான சிகிச்சை முறைகளை மேற்கொண்டு மரண அச்சுறுத்திலிருந்த பாதுகாத்துக் கொள்ள முடியும்.

 மேலும் இவ்வைத்தியசாலையின் பணிகள் பாராட்டுக்குரியது. ஒரு நிறுவனத்தினது கடந்தகால மீளாய்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் அதன் எதிர்கால திட்டம் தயாரிக்கும் நடைமுதுறைகள் அந்நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கு அடிப்படையாக அமைகின்றது.

இவ்விடயம் இங்கு மேற்கொள்ளப்பட்டு வருவது அதன் எதிர்கால இலக்கை அடைவதற்கு இலகுவாக அமையும்.

வைத்திய அத்தியடசகர் கே.எல்.நக்பர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் யு.எம்.வாஹிட் மற்றும் வைத்திய அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X