Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Kogilavani / 2016 பெப்ரவரி 29 , மு.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
'நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு, கல்வியாளர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது' என யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர் எம்.சத்தியசீலன் தெரிவித்தார்.
உலக வங்கயின் நிதி உதவியுடன் தென்கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாசார பீடத்தின் பட்டதாரி மாணவர்களின் ஆய்வரங்கு திங்ட்கிழமை பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கொண்டவாறு கூறினார்.
பீடாதிபதி எம்.அப்துல் ஜப்பார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
'பல்கலைக்கழகங்கள் ஒரு நாட்டின் வளத்தை முன்கொண்டு செல்வது மட்டுமல்லாமல், மாணவர்;களின் ஆளுமை விருத்தியையும் முன்னெடுத்து அவர்களை சர்வதேச மட்டத்துக்கு கொண்டு செல்கின்றன.
மேற்படிப்புக்காக மாணவர்களை ஊக்குவிப்பதோடு உலகலாவிய ரீதியில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான வழிவகைகளை, உயர்கல்வி அமைச்சும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் முன்னெடுக்கின்றன.
மாணவர்;கள் தமது பல்கலைக்கழக கல்வியுடன் தொழில்நுட்பக் கல்வி மற்றும் கணினி, ஆங்கிலம் போன்றவற்றை கற்று சர்வதேச தொழிற்சந்தையில் போட்டிபோடக் கூடியதாக எம்மை வளர்;த்துக் கொள்ள வேண்டும்.
தென்கிழக்கு பல்கலைக்கழகம் நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களை விட ஒரு சிறப்பம்சத்தை கொண்டுள்ளது. இலங்கையின் நாலா பாகங்களிலுள்ள சகல இன மாணவர்களும் கல்வி கற்கக் கூடிய சுமூகமான இடத்தை வகிக்கின்றது.
பல்கலைக்கழகங்கள் வெறுமெனே கல்வி கற்பிக்கக் கூடிய இடமாக மட்டும் இருந்த விடாது ஓர்ஆய்வு நிலையமாகவும் பிரதேசத்தின் அபிவிருத்தியை இலக்குவாக கொண்டு செயற்பட வேண்டும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .