Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 26 , மு.ப. 06:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கார்த்திகேசு
தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தில் தொழில் சங்கங்களின் செயற்பாடுகளுக்கு பூரண சுதந்திரம் அளித்து, அச்சங்களால் முன்னெடுக்கப்படும் தொழிலாளர் நலன் சார்ந்த போராட்டங்களையும் கவனத்தில் கொண்டு அநேகமான கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவி சாய்த்துள்து. ஆனால், அம்பாறை மாவட்ட அபிவிருத்தி உத்தியோகஸ்தர் தொழில் சங்கத்தின் கோரிக்கைகளை புறந்தள்ளி வருவதாக அதன் தலைவர் கே.எம்.கபீர் தெரிவித்தார்.
அக்கரைப்பற்று டி.எப்.சி ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை (25) நடைபெற்ற பிரதேச இணைப்பாளர்களுடனான சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'நாம் நியமனம் பெற்று 4 வருடங்களாகும் போதிலும், தங்களுக்கான கடமைப் பட்டியல் இல்லாது வெறுமனே பதவிகளை மாத்திரம் கொண்டு செயற்படுவதுடன், சில பிரதேச செயலக மட்டங்களில் பல அசௌவுகரியங்களை சந்தித்தும் வருகின்றோம்' என்றார்.
'மேலும் எமது வருடாந்த இடமாற்றம், பதவி உயர்வு, தொழில் ரீதியான சவால்; உள்ளிட்ட பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டியுள்ளது. நாம் பொதுமக்களுக்கான சேவையை மனப்பூர்வமாக மேற்கொள்வதற்கு தயாராகவுள்ளோம். நீதிக்குப் புறம்பாக ஒரு நாளும் எமது சங்கம் செயற்படாது. எமது அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களின் நலன் திட்டங்களை முன்னெடுப்பதலும் பின் நிற்காது' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .