Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 21 , மு.ப. 08:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கார்த்திகேசு
கடந்த யுத்தத்தைக்; காரணம் காட்டி கடந்த ஆட்சியளர்களினால் அம்பாறை மாவட்டத்தில் திட்டமிட்டு தமிழர்களின் 11 பூர்வீகக் கிராமங்கள் பறிக்கப்பட்டுள்ளதுடன், இன்றும் 07 தமிழ்க் கிராமங்கள் அச்சுறுத்தலுக்குள்ளாகி வருகின்ற நிலைமை காணப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரியநாயகம் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
திருக்கோவில் பிரதேச செயலகத்தில் சனிக்கிழமை (20) அரசாங்க ஓய்வூதியச் சங்கத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் பாண்டிச்சேரி, கோவா போன்ற இடங்களில் காணப்படுகின்ற ஒரு நிலத் தொடர்பற்ற சமஷ்டி முறையிலான ஆட்சியை நாம் வலியுறுத்த வேண்டியுள்ளது. அப்போது எமது பூர்வீகக் கிராமங்களையும் எமது மண்ணையும் பாதுகாப்பதன் மூலமாக அழிந்து போயுள்ள தமிழர்களின் கல்வி, கலை, கலாசாரம் மற்றும் பொருளாதாரத்தையும் தொடர்ந்து பாதுகாத்துக்கொண்டு நிம்மதியாக வாழமுடியும்.
அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களின் நிலங்கள் தொடர்ந்து பறிபோய்க்கொண்டு இருக்குமானால், தமிழர்கள் அம்பாறை மாவட்டத்தில் வாழ்ந்தார்கள் என்ற பூர்வீகம் இல்லாது போய்விடும். இதற்கு நாம் உடந்தையாக இருக்கக் கூடாது. இதனைத் தடுப்பதற்கு அம்பாறை மாவட்ட தமிழர்கள் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். இதனை சரியான சந்தர்ப்பத்தில் சரியாக சிந்தித்து குறித்த நேரத்தில் செயற்படாது போனால், எமக்கான சிறந்த தீர்;வை வெற்றி கொள்ள முடியாது. இதனால் தமிழர்கள் தொடர்ந்து ஒடுக்கப்பட்டு அடக்கு முறையிலான வாழக்;கையை அனுபவிக்கும் நிலைமைகள் தேன்றலாம். இதனை தடுக்க வேண்டும்.
இதேவேளை ஒட்டுமொத்த தமிழர்கள் மிக நீண்ட காலமாக தேடி நிற்கும் அரசியல் தீர்வுத்திட்டம் மிக விரைவில் எட்டப்படக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுகின்றது. இந்தச் சந்தர்ப்பத்தை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும். இது எமக்கு கிடைத்திருக்கின்ற கடைசிச் சந்தர்ப்பம். இதனை புத்திசாதுரியமாக நாம் பயன்படுத்தும் நிலையில் இந்த வருடம் அல்லது அடுத்த வருடத்திற்குள் எமக்கான விடிவை பெற்றுக் கொள்ள முடியும்.
இந்த தீர்வு திட்டத்தினை தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைத்த தீர்வு திட்டத்தின் அடிப்படையில் தனது தீர்வு திட்ட முன்மொழிவை வைத்துள்ளது. அதன்படி ஐக்கிய இலங்கைக்குள் பிரிபடாத வடக்கு, கிழக்கு இணைந்த நிலத் தொடர்பிலான ஒரு சமஷ்டி முறையிலான ஆட்சி அல்லது நிலத் தொடர்வு அற்ற சமஷ்டி முறையிலான ஆட்சி முறையையே நாம் கோரி நிற்கின்றோம்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
21 May 2025