2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'அரசாங்கத் தொழில் சாத்தியப்படுவதற்கான வாய்ப்பில்லை'

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 17 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

கடந்த காலத்தில் தங்களினால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து, அம்பாறை மாவட்டத்தில் தொழிற்பேட்டையை நடத்துவதற்கு அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது. இருந்தபோதிலும்,  தாங்கள் எதிர்பார்த்தவாறு அரசாங்கத் தொழில் என்ற கோரிக்கை இதன் மூலம் சாத்தியப்படுவதற்கான வாய்ப்பில்லையென அம்பாறை மாவட்ட வேலையில்லா தமிழ்ப் பட்டதாரிகள் சங்கத் தலைவர் எம்.திலீபன் தெரிவித்தார்.

இந்நடவடிக்கையை தற்காலிகத் தீர்வாகவே தாங்கள் கருதுவதாகவும் அவர் கூறினார்.

வேலைவாய்ப்பை எதிர்பார்த்துள்ள பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளுக்காக அம்பாறை மாவட்டச் செயலகத்தில் நாளை வெள்ளிக்கிழமையும் நாளை மறுதினம் சனிக்கிழமையும் தொழிற்பேட்டை நடைபெறவுள்ளது. இத்தொழிற்பேட்டைச் செயற்பாட்டின் மூலம் வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்காதெனவும் அவர் கூறினார்.

எனினும், இத்தொழில்பேட்டையில் அனைவரையும்  கலந்துகொள்ளுமாறும் இத்தொழிற்பேட்டையில் கலந்துகொள்கின்றவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட சுயவிபரக் கோவைகளை எடுத்துச் செல்லுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X