2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

'அரச சேவையாளர்கள் உளநலத்துடன் பணியாற்ற வேண்டும்'

Niroshini   / 2015 நவம்பர் 11 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

சமூகத்துக்கு பணி செய்வதற்காக நியமிக்கப்பட்ட அரச சேவையாளர்கள், தங்களிடம் சேவையை நாடி வரும் பொதுமக்களுக்கு எமது தனிப்பட்ட மன அழுத்தங்களை விடுத்து உன்னதமான உளநலத்துடன்  பணிகளை நிறைவு செய்து கண்ணியத்துடன் நடந்து கொள்வதற்கு தங்களின் உள்ளங்களை வளப்படுத்திக் கொள்ள வேண்டும் என அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் உளநள வைத்தியர் எம்.ஜே.நவ்பல் தெரிவித்தார்.

திருக்கோவில் பிரதேச செயலகத்தில் பணிபுரியும் அரச உத்தியோகத்தர்களுக்கான 'உன்னதமான உளநலத்தை நோக்கிய உளவளத்துணை' எனும் தொனிப் பொருளில் இன்று புதன்கிழமை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

உதவி செய்வதென்பதும்  மற்றவர்களை கண்ணியப்படுத்துவதென்பதும் மனிதனுக்குரிய உயரிய பண்புகள்.இந்த பண்புகளை மனித சமூகம் பாதுகாத்து கடைப்பிடிக்க வேண்டும்.இதில் ஒரு படி உயர்ந்து பொது மக்களுக்கு சேவை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள அரச உத்தியோகத்தர்கள் நிச்சயமாக கடைபிடித்து முன்மாதிரியான சேவையாளராக செயற்பட வேண்டும் என்றார்.

மேலும், இனம்,மதம் மொழிகள் கடந்து மனிதன் கண்ணியப்படுத்தல்,உதவி செய்தல் இந்த இரண்டு உயரிய பண்புகளுடன் மற்றவர்களுடன் மனம் திறந்த புன்னகையுடன் சேவை வழங்குவதென்பது இறைவனுக்கு பணி செய்வதைப் போன்றது.

இதனை மனதில் கொண்டு உன்னதமான உளநலத்துடன் இருந்து பொது மக்களுக்கு பணிகளை நிறைவு செய்து அவர்களை கண்ணியப்படுத்த வேண்டும். அப்போதுதான் நாம் செய்கின்ற தொழிலுக்கும் நாம் பெற்றுக் கொள்கின்ற ஊதியத்துக்கும் ஒரு கண்ணியம் இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .