2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'அரசியல் தீர்வை எதிர்பார்த்தவர்களாக தமிழர் உள்ளனர்'

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 14 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்

கடந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதன் தலைவர் இரா.சம்பந்தனின் தலைமையில் ஆட்சி மாற்றத்துக்கு பங்குதாரர்களாக இருந்துள்ளது.  தற்காலத்தில் அரசியல் சீர்திருத்தங்கள் நடைபெற்று நிரந்தர அரசியல் தீர்வுத்திட்டம் தமிழ் மக்களுக்கு கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கின்றது. அதனை எதிர்பார்த்தவர்களாக தமிழ் மக்கள் இருக்கின்றனர் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்

தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு, சம்மாந்துறை கல்வி வலயத்துக்குட்பட்ட வேப்பையடி கலைமகள் வித்தியாலயத்தில் அதிபர் சீ.பாலசிங்கன் தலைமையில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், 'கடந்த காலத்தில் இந்த நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக தமிழ்ச் சமூகம் கல்வியில் பெரிதும் பின்னடைவைச் சந்தித்திருக்கின்றது. ஏனைய சமூகங்கள் கல்வியிலும் பொருளாதாரத்திலும் அரசியலிலும் முன்னிலையிள்ளன. ஆனால், பின்னடைவிலுள்ள தமிழர்களின் இந்த நிலைமையை மாற்றவேண்டும்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X