2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

'அரசியல் பிரவேசத்துக்கு கல்வியே காரணம்'

Niroshini   / 2015 ஒக்டோபர் 22 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

பிரதேசத்திலுள்ள வறிய மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதும் அதனை அரசியல்வாதிகள் கண்டும் காணாதது போல் இருந்தமையே என்னை அரசியலுக்கு கொண்டு சென்றது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் தெரிவித்தார்.

சம்மாந்துறை அல்-அமீன் வித்தியாலத்தியாலய கல்வி வளர்ச்சி மற்றும் பாடசாலைகளின் அபிவிருத்தி போன்ற விடயங்கள் தொடர்பான கலந்துரையாடல் சம்மாந்துறை அதிபர் சங்க தலைவரும் அல்-ஹம்ரா வித்தியாலய அதிபருமான ஏ.ஏ.அமீர் அலி தலைமையில் சம்மாந்துறை அல்-அமீன் வித்தியாலத்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.இதன்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

என்னுடைய குடும்பம், நான் சார்ந்த உறவினர்களையும் பார்த்தால் நான் இன்று அரசியலுக்கு வரவேண்டிய தேவையில்லை.

ஆனால், நான் இன்று அரசியலுக்கு வரவேண்டும் என்ற எண்ணக்கருவை ஏற்படுத்தியது இந்த கல்விதான். அதிபரின் மகனாக பிறந்த நானும் ஒரு ஆசிரியானாக வரவேண்டியிருந்தும் எனது பாதையை அரசியலின் பக்கம் மாற்றினேன்.

அபிவிருத்திகள் செய்ய வேண்டிய அரசியல்வாதிகள் பாராமுகமாக செயற்படுவதால் பாதிக்கப்படுவது ஏழை மக்கள்தான். இவ்வாறான பல்வேறு சம்பவங்களை கண்ட எனக்கு என்னுள் ஒரு எண்ணம் தோன்றியதனால்தான் நான் இன்று அரசியலுக்குள் வர நேரிட்டது.

எனக்கு தற்போது அரசியல் அதிகாரம் ஒன்று கிடைத்துள்ளது. அதனை கொண்டு நமது பிரதேசத்துக்கு எவ்வாறான அபிவிருத்திகளை மேற்கொள்ளவேண்டுமோ அதன் ஊடாக ஏழை மக்களுக்கு பல நலன்களை செய்துகொடுத்து அதன் மூலம் அவர்கள் எவ்வாறு நிறைந்த பலன்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி ஆலோசிப்பதற்காகவே உங்களை அழைத்திருக்கின்றேன் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X