2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

'அழிந்துபோயுள்ள கல்வியை கட்டியெழுப்பவுள்ளேன்'

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 14 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

அம்பாறை மாவட்டத்தில் கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக அழிந்துபோயுள்ள கல்வியை தனது பதவிக்காலத்தில் மீளக் கட்டியெழுப்பி அதன் மூலம் அனைத்துப் பிரச்சினைகளிலும் விடுதலை பெற்ற சமூகமாக மாற்றவுள்ளதாக  தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பின்  அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரியநாயகம் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

டிப்ளோமா பயிற்சிநெறியை பூர்த்தி செய்த ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'ஏனைய சமூகத்தவர்கள் கல்வியில் உயர்ந்து நிற்கின்றபோதிலும், எமது தமிழ்ச் சமூகம் குறைந்த மட்டத்தில் காணப்படுகின்றது. இதற்குக் காரணம் நாட்டில் இடம்பெற்ற யுத்தம். இதனால், தமிழ்ச் சமூகம் முப்பது வருடங்கள் கல்வியிலும் பொருளாதாரத்திலும் தொழில் வாய்ப்புக்களிலும் பின்நோக்கி காணப்படுகின்றது.

இதற்கு எனது பதவிக்காலத்தில் முற்றுப்புள்ளி வைப்பதற்கான செற்பாடுகளில் தற்போது கால் பதித்துள்ளேன். இதற்காக ஒரு பலம் பொருந்திய கல்வி மேம்பாட்டுக்கான குழுவை உருவாக்கி அதற்கு எனது நாடாளுமன்ற சம்பளத்தை வழங்குவதுடன்,  புலம்பெயர்ந்த தமிழர்களும் சர்வதேச நிதியங்களும் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற தனவந்தர்களும் இதற்கு ஆதரவு வழங்கியுள்ளார்கள். இதன் மூலமாக தமிழ் மக்கள் மத்தியில் எதிர்வரும் காலங்களில் கல்வி ரீதியாக புரட்சியை ஏற்படுத்தி தமிழ்ச் சமூகத்தில் ஒரு கல்வி மறுமலர்ச்சியை ஏற்படுத்துவேன்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X