2025 மே 22, வியாழக்கிழமை

'ஆசிரிய பணி என்பது புனிதமானது'

Thipaan   / 2016 ஜனவரி 23 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஜி.ஏ.கபூர்

ஆசிரிய பணி என்பது புனிதமானது. தியாக மனப்பான்மையுடனும், அர்ப்பணிப்புடனும் இப் பணியைத் திறம்பட நிறைவேற்றிய ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் மட்டுமல்லாது தாம் சார்ந்த சமூகத்திலும் மதிக்கப்படுவார்கள். வாழ்வில் மட்டுமல்லாது நல் ஆசிரியர்கள் இறந்த பின்னும் வாழ்ந்து கொண்டிருக்கிருக்கிறார்கள். அவ்வாறான ஆசிரியர்களை சமூகத்தினால் ஒருபோதும் மறந்துவிட முடியாது என்று அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்-ஷேய்க் ஏ.எல்.எம்.காஸீம் தெரிவித்தார்.

பட்டதாரி ஆசிரியராக, அதிபராக, கோட்டக் கல்வி அதிகாரியாக 38 வருடங்கள் சேவையாற்றி ஓய்வு பெற்றுச் செல்லும் அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) அதிபர் எம்.ஐ.எம்.சஹாப்தீன், ஓய்வு பெற்றுச் செல்லும் அல்-ஹிதாயா அதிபர் எஸ்.எம்.ஆதம் லெப்பை, அல்-கமர் வித்தியாலய அதிபர் எம்.ஏ.அப்துல் றஸ்ஸாக் ஆகியோர்களுக்கு  அக்கரைப்பற்று கோட்ட அதிபர்கள் சங்கம் நடாத்திய, சேவை நலன் பாராட்டு வைபவம் அக்கரைப்பற்று அர்-ரஹீமியா வித்தியாலயத்தில் நேற்று (21) வியாழக்கிழமை நடைபெற்றது.

அதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அக்கரைப்பற்று கோட்டக் கல்வி அதிகாரி ஏ.எல்.இக்பால் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் ஓய்வு பெற்றுச் செல்லும் மூன்று அதிபர்களினதும் சேவையைப் பாராட்டி வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்-ஷேய்க் ஏ.எல்.எம்.காஸீம், பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.றஹ்மதுல்லா மௌலவி, கோட்டக் கல்வி அதிகாரி ஏ.எல்.இக்பால், அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை), ஆயிஷா முஸ்லிம் பாளிகா மஹா வித்தியாலயம், ஆர்-றஹீமியா வித்தியாலயம், முனவ்வறா கனிஷ்ட கல்லூரி, அல்-பாத்திமியா மற்றும் பாயிஷா மஹா வித்தியாலயம், ஸாஹிறா வித்தியாலயங்களின் அதிபர்கள் முதலியோர் பொன்னாடை போர்த்தி, வாழ்த்துப் பத்திரம் வாசித்து வழங்கி, நினைவுப் பரிசு என்பன வழங்கி பாராட்டினர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X